களனியிலிருந்து கொழும்பு நோக்கி  அனைத்து  பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும்  வைத்தியபீட மாணவர்கள் செயற்பாட்டுக் குழுவும் இணைந்து  முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் பாராளுமன்றத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் 3000 இற்கும் அதிகமான மாணவர்கள்  பொரளையிலிருந்து கோட்டே வீதியினூடாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.