வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 32 வருடங்கள் நிறைவை முன்னிட்டு நடைபவணி

Published By: Digital Desk 5

13 Nov, 2022 | 09:18 PM
image

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 32 வருடங்களாகியுள்ள நிலையில் கிளிநொச்சி, நாச்சிக்குடா கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் ' எமது உரிமை மீட்புப் போராட்டம்' என்னும் தொனிப்பொருளில் நடைபவணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடை பவணி கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி கிளிநொச்சி, நாச்சிக்குடாவில்  இருந்து  ஆரம்பமாகியது. நடைபவணியில் இருவர்  பங்குபற்றுகின்றனர். 

நேற்று சனிக்கிழமை இரவு இவர்கள் நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தை வந்தடைந்து அங்கு விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் பொலிசார் அங்கு வந்து நடைபவணியில் ஈடுபடுபவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

நடைபவணியாக வந்த இருவரையும் அவர்களுக்கு துணையாக வந்த மேலும் ஒருவரையும் அழைத்து சென்றுள்ளனர்.

 நாச்சிகுடாவை சேர்ந்த ஹசன் குத்தூஸ் முஹம்மத் ஆமீம்,  சையது அலி ஈஷா மொஹிதீன்,  இனாமுதீன் உமர் பாரூக் ஆகிய மூவருமே  அழைத்து செல்லப்பட்டவர்களாவர். 

இந்த நிலையில்  கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்த மூவரையும்   பொலிஸ் வாகனத்தில்  கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு செயலாளரை சந்தித்து தாங்கள் செவ்வாய்க்கிழமையே ஜனாதிபதியை சந்திக்க இருந்ததாகவும் இது தொடர்பான ஆவணங்களை  தயாரித்து வருவதாகவும் அவர்கள் அங்கு தெரிவித்தனர்.

இந்த நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் மகஜரை கையளிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை இந்த சந்திப்பு முற்பகல் வேலை இடம்பெறவுள்ளது.

வடபகுதியில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 32 வருடங்களாகியும் தமக்கான மீள்குடியேற்றம் துரிதகதியில் இடம்பெறவில்லை எனவும் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களுக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படவில்லை எனவும் இந்த நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த நடைப்பவணி கொழும்பு வரை சென்று ஜனாதிபதியைச் சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ள உலகிலேயே கொச்சை கடை பிரதேசத்தில் வைத்து அவர்களுடைய நடைப்பவனே நிறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கற்பிட்டியில் திமிங்கல வாந்தியுடன் இரு மீனவர்கள்...

2024-05-29 10:07:37
news-image

வடக்கு ரயில் பாதை அபிவிருத்தி பணிகள்...

2024-05-29 09:23:19
news-image

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்...

2024-05-29 09:19:38
news-image

இன்றைய வானிலை

2024-05-29 06:14:11
news-image

ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் பிற்போடும்...

2024-05-29 05:45:55
news-image

பட்டமளிப்பு விழாவை பிற்போடுவது இளங்கலை மாணவர்களின்...

2024-05-29 01:44:39
news-image

கண்டியில் பிரபல வர்த்தகர் ஒருவர் 20...

2024-05-29 01:41:06
news-image

வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20...

2024-05-29 01:29:28
news-image

55 வயது நிறைவடைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும்...

2024-05-29 01:25:16
news-image

அரசியலமைப்பிற்கமைய ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி...

2024-05-29 01:17:00
news-image

தேர்தலை பிற்போடுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது -...

2024-05-29 01:14:15
news-image

தர்மலிங்கம் சித்தார்த்தன், விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின்...

2024-05-29 01:07:01