பொலிஸ் கடமைக்கு இடையூறு விளைவித்த வழக்கிலிருந்து ஞானசார தேரர் விடுதலை

Published By: Digital Desk 2

13 Nov, 2022 | 08:37 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ராஜகிரிய - நாவல வீதியில் பொலிஸ் வீதித் தடையில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு கடமையில் இருந்த பொலிஸ் பரிசோதகரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறி தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து பொது பல சேனா அமைப்பின்  செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதிவான்  ஹர்ஷன கெக்குணவல இதற்கான உத்தரவை கடந்த வெள்ளியன்று ( 11) பிறப்பித்துள்ளார்.

சம்பவத்துக்கு முகம்கொடுத்த பொலிஸ் பரிசோதகர், தொடர்ச்சியாக வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகாத சூழலில்,  குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 188 ( 2) ஆம் அத்தியாயம் பிரகாரம்,  ஒருவருடத்துக்குள் மீள வழக்குத் தொடுக்க முடியும் என்ற நிபந்தையின் கீழ் ஞானசார தேரர் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொது பல சேனாவை சாடியுள்ள அமெரிக்கா

போதைப்பொருள் சுற்றிவளைப்பு கடமையில் இருந்த பொலிஸ் பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு  மே 19 ஆம் திகதி, கலகொட அத்தே ஞானசார தேரர் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ச் செய்யப்பட்டிருந்ததுடன் அப்போது அவர் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, தண்டனை சட்டக் கோவையின் 344 ஆம் அத்தியாயத்தின் கீழ்  பொலிஸாரால் ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த குற்றச்சாட்டுக்கு தான் நிரபராதி என ஞானசார தேரர் அறிவித்த நிலையில் வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும் சம்பவத்துக்கு முகம் கொடுத்த பொலிஸ் பரிசோதகர் சுபாஷன தொடர்ச்சியாக வழக்கு தொடர்பில் மன்றில் ஆஜராகாமையால், ஞானசார தேரரை வழக்கிலிருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டாலும், அவருக்கு எதிராக ஒருவருடத்துக்குள்  மீள வழக்குத் தொடுக்க முறைப்பாட்டாளருக்கு உரிமை இருப்பதாக இதன்போது நீதிவான் சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100...

2025-12-11 01:30:52
news-image

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின்...

2025-12-11 01:27:01
news-image

கைது செய்யப்பட்டவரை நீண்டகாலம் தடுத்து வைப்பது...

2025-12-11 01:22:45
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாசி வேண்டி நாடளாவிய...

2025-12-10 23:51:41
news-image

30 க்கு மேற்பட்ட நீர் இறைக்கும்...

2025-12-10 23:42:06
news-image

ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்திடமிருந்து இலங்கைக்கு...

2025-12-10 23:40:07
news-image

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ...

2025-12-10 23:33:34
news-image

திருகோணமலை – மட்டக்களப்பு சாலையில் லொறியும்...

2025-12-10 23:27:28
news-image

கருணை மிகுந்த செயல் பெரும் நம்பிக்கையை...

2025-12-10 19:10:24
news-image

ஊழலற்ற அரச நிர்வாகத்தால் உலக நாடுகள்...

2025-12-10 18:59:59
news-image

இந்திய மீனவர் அத்துமீறல்  வடக்குமாகாண மீனவர்பிரச்சினைகள்...

2025-12-10 21:18:26
news-image

வடக்கு - கிழக்கு மலையகத்துக்கான புகையிரத...

2025-12-10 18:28:06