இந்தியாவிலிருந்து வந்த பெண் உள்ளிட்ட மூவரிடம் கொள்ளை : உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட நால்வரை கைது செய்ய நடவடிக்கை

Published By: Digital Desk 2

13 Nov, 2022 | 08:18 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

இந்தியாவுக்கு சென்று ஆடைகளை கொள்வனவு செய்து எடுத்து வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் போது, ஜா எல பகுதியில் வைத்து பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் பயணித்த வாகனத்தை மறித்து 40 இலட்சம் ரூபா வரை பெறுமதி மிக்க வெளிநாட்டு நாணயம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், களனி வலய குற்ற விசாரணைப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான்  பிரேமரத்னவுக்கு  சம்பவத்துக்கு முகம் கொடுத்த மூவரும் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஏ.ஜே.வை.டி. கிரிஷாந்தவின் நேரடி கட்டுப்பாட்டில்  சிறப்புக் குழுவொன்று இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சென்னையில் தேர்தல் பறக்கும்படை எனக் கூறி ஒரு கோடி கொள்ளை | A robbery  claimed that the name of election squad in Chennai | Puthiyathalaimurai -  Tamil News | Latest Tamil News | Tamil News Online ...

 உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், சார்ஜன் ஒருவர், இரு கான்ஸ்டபிள்கள்  அடங்கிய நால்வர் கொண்ட குழுவை கைது செய்யவே இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ள நிலையில், அவர்கள்  தற்காலிகமாக கடமையிலிருந்தும் இடை நிறுத்தப்ப்ட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

 இந் நிலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆரம்பகட்ட விசாரணையிகளில், கடந்த 9 ஆம் திகதி இரவு குறித்த பொலிஸ் குழு, தனியார் ஒருவரின் வேனில் சென்று இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இது தொடர்பில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆரம்பகட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், சட்ட விரோதமாக நடடுக்குள் தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்களை கடத்துவது தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த சுற்றி வலைப்புக்காக  தாங்கள் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவர்கள் அந்த சுற்றிவளைப்பு தொடர்பில் உயரதிகாரிகள் எவருக்கும் அறிவித்திருக்கவில்லை என  மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர், இந்தியாவிலிருந்து கட்டுநாயக்கவுக்கு வந்து அங்கிருந்து கொழும்பு நோக்கி வேன் ஒன்றில் பயணித்துக்கொன்டிருந்துள்ளனர்.

அந்த வேனை பின் தொடர்ந்து தனியார் வேன் ஒன்றில் வந்துள்ள இந்த பொலிஸ் குழு, அவர்களை ஜா எல பகுதியில் வைத்து  மறித்து கைது செய்துள்ளனர்.

கொழும்பு 13 கதிரேசன் வீதியைச் சேர்ந்த ஒருவர், தெஹிவளையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் வாரியப்பொல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரும் குறித்த உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினரால் பின்னர் பேலியகொடை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

விசாரணைகளின் போது அடிக்கடி இந்தியாவுக்கு சென்று துணிமணிகளை எடுத்துவரும் குழுவினரே அவர்கள் என தெரியவந்துள்ளது.

எனினும் பொலிஸ் நிலையம் அழைத்துவரப்பட்ட அவர்கள், உயர் பொலிஸ் அதிகாரிகளின் ஆலோசனைகள் எதனையும் பெற்றுக்கொள்ளாமல், பொலிஸ் புத்தகங்களிலும் எந்த பதிவினையும் இடமால், கைப்பற்றப் பட்ட பொருட்களுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இரவோடிரவாக விடுவிக்கப்பட்ட அவர்கள், மறு நாள் 10 ஆம் திகதி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரதனவை சந்தித்து, முறைப்பாடளித்துள்ளனர்.

தம்மை கைது செய்து விடுவித்த பொலிஸ் குழுவினர், கைது செய்யும் போது அவர்களின் பொறுப்பிலெடுத்த 6 மோதிரங்கள், 4 தங்க வளையல்களையும் 38000  அமரிக்க டொலர்களையும் திருப்பித் தரவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந் நிலையிலேயே அந்த முறைப்பாட்டை மையப்படுத்தி, குறித்த உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட நால்வருக்கும் எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40