(பா.ருத்ரகுமார்)

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் சுகாதார துறையை பாதிக்கும் வகையிலான பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நாடு முழுவதிலும் காலை 8.30 மணி முதல் 24 மணி நேரத்துக்கு அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் பல்மருத்துவர்கள், ஆயர்வேத வைத்தியர்கள், அரச வைத்தியர்கள் உள்ளிட்ட அனைத்து வைத்தியர்களும் இன்றைய தினம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் , 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச பணியாளர்கள், வைத்திய தொழில் துறையினர் மற்றும் நாட்டுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. இது தொடர்பில் அனைத்து தரப்பினரிடத்திலும் எடுத்து கூறியும் இதுவரையில் தீர்மானம் எதுவும் எட்டப்படாமையினாலேயே அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு செல்ல தீர்மானித்ததாகவும் அச்சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்சா தெரிவித்தார்.