போலி பற்றுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடுகளிலிருந்து அனுப்பபட்ட 16 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவை மோசடி செய்தவர் கைது 

Published By: Vishnu

13 Nov, 2022 | 04:22 PM
image

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள வலுவிழந்த சிறுவர் இல்லம் ஒன்றிற்கு வெளிநாடுகளில் இருந்து அன்பளிப்பாக வழங்கப்பட்ட  16 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவை  போலி பற்றுச் சீட்டு மூலம் மோசடி செய்த குற்றச்சாட்டில் அங்கு கடமையாற்றி வந்த தன்னாமுனையைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (13) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு விசேட குற்ற விசாரணைப் பிரிவினர்  தெரிவித்தனர். 

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் வழிவிழந்த சிறுவர்களை பராமரிப்பதற்காக இல்லம் அமைக்கப்பட்டு அங்கு நீண்ட காலமாக  நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர்களை தங்கவைத்து பராமரித்து செயற்பட்டுவருகின்றது.

இந்த நிலையில் ஏறாவூர் தன்னாமுனையைச் சேர்ந்த 38 வயதுடைய ஆண் ஒருவர் அங்கு கடமையாற்றிவந்துள்ளார்.

இதன் போது லண்டனில் வசித்துவரும் இலங்கையைச் சேர்ந்த  ஒருவர்  அந்த இல்லத்திற்கு வருகை தந்து இல்லத்தை பார்வையிட அவருக்கு அங்கு கடமையற்றிவரும் குறித்த நபர் உதவி செய்யத நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் லண்டனில் இருந்து வந்தவர் திரும்ப லண்டன் சென்று இந்த வலுவிழந்த சிறுவர் இல்ல சிறுவர்களுடன் தான் எடுத்த புகைப்படங்களை தமது நண்பர்களுக்கு காட்டிதையடுத்து அவர்களும் அந்த இல்லத்திற்கு உதவி புரியவேண்டும் யாரிடம் தொடர்பு கொள்ளவேண்டும் என அவரிடம் கேட்டதையடுத்து அவர் தனக்கு உதவி புரிந்த அங்கு கடமையாற்றிவரும் குறித்த நபரின் தொலைபேசி இலக்கதை வழங்கியுள்ளார்.

அந்த குறித்த நபரின் இலக்கத்துடன் லண்டனில் இருந்து தொடர்பு கொண்டு நிதி வழங்கவேண்டும் எவ்வாறு செய்வது  சம்பாசனையையடுத்து குறித்த நபரின் வங்கி கணக்கிற்கு லண்டனில் இருந்து பணத்தை அனுப்பியதும் அதனை வங்கியில் இருந்து எடுத்து இல்ல நிர்வாகத்திடம் கொடுத்து அதற்கான பற்றுசீட்டை வாங்கி அதனை வட்ஸ்ஆப் ஊடாக  பணத்தை வழங்கியதற்காக ஆதாரமாக பணத்தை அனுப்பியவர்களுக்கு அனுப்பி வந்துள்ளார்.  

இவ்வாறான நிலையில் குறித்த நபரின் வங்கி கணக்கிற்கு  வெளிநாட்டில் இருந்து சிறுவர் இல்லத்துக்கு வழங்குமாறு அனுப்பிய நிதிகளை குறித்தபர் இல்லத்துக்கு வழங்கியது போல போலி பற்றுச் சீட்டுக்கள் கொண்ட புத்தகங்களாக  ஏறாவூர் பிரசேத்தில் உள்ள அச்சகம் ஒன்றில் அச்சிட்டு அந்த போலி பற்றுச் சீட்டில் வங்கிக்கு அனுப்பிய பணத் தொகையை நிரப்பி முத்திரைகள் குற்றி அந்த போலி பற்றுச் சீட்டை வெளிநாட்டில் இருந்து பணத்தை அனுப்பியவர்களுக்கு வட்ஸ் ஆப் ஊடாக அனுப்பி 16 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா வரையிலான பணங்களை மோசடி செய்து வந்துள்ளார் என விசேட குற்ற புலனாய்வு பிரிவினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடி தொடர்பாக சிறுவர் இல்ல நிர்வாகிகளுக்கு தெரியவந்துதையடுத்து அவர்கள்  மட்டக்களப்பு விசேட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து  விசேட குற்ற விசாரணைப் பிரிவி பொறுப்பதிகாரி சப் இன் பெக்ஸ்டர் பத்திராஜா தலைமையிலான  பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(13) குறித்த நபரின் வீட்டை முற்றுiகையிட்ட அவரை கைது செய்ததுடன் அச்சகத்தில் அச்சிடப்பட்ட போலி பற்றுச் சீட்டு புத்தகங்களை மீட்டுள்ளதாகவும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலுக்காக பொய் கூறும் அரசாங்கத்துக்கு மக்கள்...

2025-03-25 17:06:50
news-image

இலங்கை - சீன நட்புறவு என்றும்...

2025-03-25 18:26:23
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் 

2025-03-25 18:22:02
news-image

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்த திட்ட...

2025-03-25 18:33:35
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

2025-03-25 17:31:19
news-image

நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய...

2025-03-25 17:40:02
news-image

செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து...

2025-03-25 17:09:47
news-image

முச்சக்கரவண்டியிலிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுப்பு :...

2025-03-25 17:04:04
news-image

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2025-03-25 17:01:14
news-image

19 வயதில் கைதுசெய்யப்பட்ட இருவர் 30...

2025-03-25 16:57:39
news-image

கொழும்பு - கண்டி வீதியில் விபத்து...

2025-03-25 16:16:22
news-image

கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய தின...

2025-03-25 17:11:15