மல்வானையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இருந்து பாரவூர்திகளில் பெற்று கொள்ளப்படும் டீசலில் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட 4 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மோசடி மல்வானை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில்  நடைபெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தொம்பே பொலிஸார் நேற்று அதிரடியாக மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பாரவூர்தியின் சாரதிகள் இருவர் மற்றும் உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி சம்பவத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 3 நபர்களும் கும்புக்வெவ, இமதுவ மற்றும் கடுவலை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய கடுவலை பிரதேசத்தை சேர்ந்த பிரதான சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சுற்றுவளைப்பின் போது மண்ணெண்ணெய் கலக்கப்பட்ட 13 ஆயிரத்து 200 லீட்டர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.