(எம்.வை.எம்.சியாம்)
ஹொரன பிரதேசத்தில் வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஹொரன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரத்தினபுரி-பாணந்துறை பிரதான வீதியின் முனகம பிரதேசத்தில் இங்கிரிய நோக்கி பயணித்து கொண்டிருந்த பஸ் ஒன்றினை முந்தி செல்வதற்கு முயன்ற போது முன்னால் வந்த வேன் ஒன்றுடன் குறித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்த நபர் ஆகியோர் ஹொரன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 29 வயதுடைய ஒருவர் எனவும் அவர் இஹல நாரகல, கொவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த வர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்து தொடர்பில் பஸ் மற்றும் வேன் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹொரன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM