உலகக் கிண்ண இறுதிப் போட்டி: முதலில் துடுப்பெடுத்தாடுகிறது பாகிஸ்தான் !

Published By: Vishnu

13 Nov, 2022 | 02:23 PM
image

(நெவில் அன்தனி)

எட்டாவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் சம்பினைத் தீர்மானிக்கும் இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மாபெரும் இறுதிப் போட்டி மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

No description available.

இறுதிப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கலாந்து அணித் தலைவர் ஜொஸ் பட்லர் களத்தடுப்பை தெரிவு செய்ததற்கு அமைய பாபர் அஸாம் தலைமையிலான பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் 2009இல் சம்பியனான பாகிஸ்தான் மூன்றவாது தடவையாகவும் 2010இல் சம்பியனான இங்கிலாந்து இரண்டாவது தடவையாகவும் இன்றைய இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன.

1992 உலகக் கிண்ண (50 ஓவர்) இறுதிப் போட்டியில் விளையாடிய அதே நாடுகளின் அணிகள் 3 தசாப்தங்களுக்குப் பின்னர் அதே அரங்கில் ரி 20 வகையான உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடுகின்ற  மை விசேட அம்சமாகும்.

சீரற்ற காலநிலை நிலவினால்...

இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மெல்பர்னில் இன்று நடைபெறவுள்ள ரீ 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி மழையினால் தடைப்படலாம் என அஞசப்படுகிறது.

No description available.

ஒருவேளை ஞாயிற்றுக்கிழமை மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைப்பட்டால் ஒதுக்கப்பட்டுள்ள நாளான திங்களன்று போட்டியை நடத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை எண்ணியுள்ளது.

ஆனால், திங்களன்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டால் உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக இரண்டு நாடுகள் இணை சம்பியன்களாக பிரகடனப்படுத்தப்படும்.

இறுதிப் போட்டியில் முடிவைத் தீர்மானிக்க குறைந்தது 10 ஓவர்கள் வீதம் விசப்பட்டிருக்கவேண்டும்.

ஞாயிறன்று ஆட்டம் ஆரம்பமாகி மழையினால் தடைப்பட்டால் விடப்பட்ட இடத்திலிருந்து திங்களன்று ஆட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அணிகள்

இங்கிலாந்து: ஜொஸ் பட்லர் (தலைவர்), அலெக்ஸ் ஹேல்ஸ், ஃபில் சோல்ட், பென் ஸ்டோக்ஸ், ஹெரி ப்றூக், லியாம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ்,  கிறிஸ் ஜோர்டன், ஆதில் ராஷித்.

பாகிஸ்தான்: பாபர் அஸாம் (அணித் தலைவர்), மொஹமத் ரிஸ்வான், மொஹமத் ஹரிஸ், ஷான் மசூத், இப்திகார் அஹ்மத், மொஹமத் நவாஸ், ஷதாப் கான், மொஹமத் வசிம், நசீம் ஷா, ஹரிஸ் ரவூப், ஷஹீன் ஷா அப்றிடி.

உலகக் கிண்ணத்தை யார் கைப்பற்றுவது ? இயற்கை கைகொடுக்குமா ? இங்கிலாந்து - பாகிஸ்தான் இன்று மோதல் ! 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டயலொக் தலைமையகத்தில் ஐசிசி ஆடவர் ரி20...

2026-01-23 20:19:55
news-image

19 வயதின் கீழ்  ஆண்க  உலகக்...

2026-01-23 17:19:50
news-image

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்...

2026-01-23 14:58:50
news-image

தீர்மானம் மிக்க நியூ ஸ்டார் -...

2026-01-23 17:21:25
news-image

ஐசிசி 19 வயதின்கீழ் ஆண்கள் உலகக்...

2026-01-23 12:52:20
news-image

ICC T20 உலகக்கிண்ணம் இலங்கையில் மக்கள்...

2026-01-23 16:13:22
news-image

இங்கிலாந்துடனான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில்...

2026-01-22 23:03:17
news-image

பராசூட் மூலம் விமானப்படை வீரர்களால் அரங்கிற்கு...

2026-01-22 19:07:02
news-image

தேசிய அலைச் சறுக்கல் பெண்கள் பிரிவில்...

2026-01-22 17:17:49
news-image

இங்கிலாந்துடனான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்...

2026-01-22 14:33:52
news-image

ஐசிசி ரி20 ஆடவர் உலகக் கிண்ணத்திற்காக...

2026-01-21 21:19:09
news-image

ICC T20 உலகக்கிண்ணப் போட்டியில் வழங்கப்படும்...

2026-01-21 20:58:30