அனைத்து  பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும்  வைத்தியபீட மாணவர்கள் செயற்பாட்டுக் குழுவும் இணைந்து  முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக பேலியகொடையிலிருந்து கொழும்புவரையான கண்டி வீதி கடும் வாகன நெரிசலுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்க தடைவுத்தரவு பிறப்பிக்குமாறு  வெலிக்கடை பொலிஸார் நீதிமன்றத்தில் கோரியமையை கொழும்பு மேலதிக நீதவான் சாந்தன கலங்கசூரிய நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதால் குறித்த ஆர்ப்பாட்டத்துக்கு தடைவுத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தில் கோரியிருந்தமை குறிப்பிடதத்தக்கது.