தயாரிப்பாளரும் நடிகருமான விஷ்ணு விஷால் மற்றும் 'மாஸ் மகாராஜா' ரவி தேஜா நடிப்பில் தயாராகியுள்ள புதிய திரைப்படமான 'கட்டா குஸ்தி' எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் தயாராகியுள்ள முதல் திரைப்படம் 'கட்டா குஸ்தி'.
தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான 'மாஸ் மகாராஜா' ரவி தேஜாவும், தமிழின் முன்னணி நட்சத்திர அந்தஸ்தை எட்டிப் பிடித்திருக்கும் நடிகர் விஷ்ணு விஷாலும் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகர்களாக இணைந்து நடித்திருக்கிறார்கள்.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். அத்துடன் காளி வெங்கட், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.
மல்யுத்த விளையாட்டை மையப்படுத்தி தயாராகியுள்ள இந்த படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரவி தேஜா இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாரித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுவரும் நிலையில், படத்தின் வெளியீட்டுத் திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு விஷாலின் படம் வெளியாகப்போகும் டிசம்பர் 2ஆம் திகதியன்றே தனுஷ் நடித்த 'வாத்தி' படமும் தமிழ், தெலுங்கு மொழிகளில் தியேட்டர்களில் வெளியாவதால் திரையுலகில் பெரும் பரபரப்பும் போட்டி நிலையும் உருவாகியிருப்பதாக சினிமா வட்டாரம் தெரிவிக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM