இலங்கையை சேர்ந்த பிக் பொஸ் பிரபலமும் நடிகருமான தர்ஷன் கதாநாயகனாக நடித்திருக்கும் 'நாடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.
'எங்கேயும் எப்போதும்', 'இவன் வேற மாதிரி', 'வலியவன்' படங்களின் இயக்குநர் எம். சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் 'நாடு'.
இந்த படத்தில் 'கூகுள் குட்டப்பா' பட புகழ் நடிகர் தர்ஷன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மகிமா நம்பியார் நடித்திருக்கிறார். இவர்களுடன் சிங்கம்புலி, அருள்தாஸ், இன்பா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு சி. சத்யா இசையமைத்துள்ளார்.
வாழ்வியல் சார்ந்த யதார்த்தமான படமாக அமைந்துள்ள 'நாடு' படத்தை ஸ்ரீ ஆர்க் மீடியா நிறுவனம் சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுவரும் இந்த தருணத்தில் 'நாடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
இதில் தர்ஷனின் தோற்றமும், அதன் நிலவியல் பின்னணியும் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கின்றன.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,
''எளிய மனிதர்களை பற்றிய வாழ்வியலை மையப்படுத்தி 'நாடு' படத்தினை உருவாக்கியுள்ளோம். மலைவாழ் மக்களின் பிரச்சினையை விவரித்திருக்கிறோம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கொல்லிமலை என்ற மலைப் பிரதேசத்துக்கு பயணித்தபோது அங்கு நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி, இதன் திரைக்கதையை எழுதியிருக்கிறேன். அனைத்து தரப்பு மக்களும் விரும்புகிற வகையில் இப்படம் தயாராகி வருகிறது'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM