டயலொக் கேமிங் அனுசரணையில் Gamer.LK இன் வருடாந்த eSports, Video Games & Comic மாநாடு

By Priyatharshan

29 Nov, 2016 | 02:53 PM
image

வருடாந்த eSports சம்பியன்ஷிப் மற்றும் நிகழ்வுகள் டிசம்பர் 9, 10 மற்றும் 11ம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வின் போது, தேசத்தின் தேசிய eSports போட்டித்தொடரான ஸ்ரீ லங்கா சைபர் கேம்ஸ் (SLCG), Gamer.LK  இனால் தொடர்ச்சியாக 9வது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறவுள்ளது.

நாட்டின் சகல பிராந்தியங்களையும் சேர்ந்த கேமர்களை இந்த போட்டியில்  உள்வாங்க திட்டமிட்டுள்ளது. தகுதி காண் போட்டிகள் வட, மத்திய, தென் மற்றும் மேல் மாகாணங்களில் நடைபெற்றன.

இதன்போது மாபெரும் இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்காக விளையாட்டு வீரர்கள் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டிருந்தனர். eSports சம்பியன்ஷிப்களுக்கு நிகராக கொழும்பு Comic மாநாடு இதே வளாகத்தில் டிசம்பர் 10 மற்றும் 11ம் திகதிகளில் நடைபெறும். இலங்கையின் கலை, திரைப்படம், Cosplay மற்றும் geek கலாசாரம் ஆகியவற்றை இரு தினங்களிலும் வெளிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத்தொடரில் இறுதி நிகழ்வாக கொழும்பு Comic மாநாடு நடைபெறவுள்ளது. கண்டி Comic மாநாடு நவம்பர் மாதம் கண்டி சிட்டி சென்டரில் நடைபெற்றது.

SLCG 2016ல் புகழ்பெற்ற ஒன்லைன் multiplayer gamef கள் உள்வாங்கப்பட்டிருக்கும். இதில்  Call of Duty 4: Modern Warfare, Dota 2, Counter Strike: Global Offensive, League of Legends, Call of Duty: Advance Warfare மற்றும் ஒற்றை விளையாட்டுகளான Mortal Kombat: XL, FIFA 16, Project Cars போன்றனவும் உள்ளடக்கப்பட்டிருக்கும். மேலும், புதிய விளயாட்டுக்களான Overwatch மற்றும் Tekken Tag போட்டித்தொடர் போன்றனவும் ஊக்குவிப்பு போட்டிகளான Ingress, Clash Royale மற்றும் Rider Rush by Honda ஆகியன உள்ளடங்கியிருக்கும்.

கடந்த ஆண்டு சுமார் 2500 போட்டி பங்குபற்றுநர்களை கவர்ந்திருந்ததுடன், மேலும் 20000 பேர் வரை பார்வையாளர்களாக இணைந்து கொண்ட SLCG, இலங்கையில் நடைபெற்ற மாபெரும் நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்திருந்தது.

இலங்கை eSports சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாவது நிகழ்வுகளில் ஒன்றாகவும் SLCG அமைந்துள்ளது. Gamer.LK (www.gamer.lk) இனால் ஏற்பாடு செய்யப்படும் multi-genre video gaming சமூகத்துக்கு டிஜிட்டல் மகிழ்ச்சியூட்டும் அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன. இந்த நிகழ்வு இலங்கையில் டிஜிட்டல் மகிழ்ச்சியூட்டும் அம்சங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளதுடன் வளர்ந்து வரும் டிஜிட்டல் மகிழ்ச்சியூட்டும் கலாசாரத்தையும் கொண்டுள்ளது.

கொழும்பு Comic Con இல் புகழ்பெற்ற துறைசார்ந்த நிபுணர்கள் கேம் வடிவமைப்பாளர்கள் மற்றும் கொமிக் கலைஞர்கள் ஆகியோரின் கலந்துரையாடல்கள் நடைபெறும். பங்குபற்றுநர்கள் தமக்கு விருப்பமான கதாபாத்திரங்களைப்போன்று ஆடைகளை அணிந்து சமூகமளிக்குமாறு கோரப்படுகின்றனர்.

இந்த வளர்ந்து வரும் கலாசாரத்துடன், முன்னணி பல்தேசிய நிறுவனங்கள் முன்வந்து இந்த திட்டத்துக்கு பங்களிப்பு வழங்கியுள்ளன. வேகமான மற்றும் குறைந்த தடைகள் கொண்ட இணைப்புகளை வழங்கும் டயலொக், SLCG மற்றும் கொழும்பு Comic Con க்கு நான்காவது ஆண்டாக பங்களிப்பு வழங்கவுள்ளனர். Gamer.LK உடன் இணைந்து cloud gaming server களை நிறுவவும் டயலொக் முன்வந்துள்ளது. இதன் மூலமாக multiplayer online eco கட்டமைப்பை உருவாக்க முடியும்.

இந்நிகழ்வின் போஷாக்கு அனுசரணையாளராக Creamoo Drinking Yoghurt கைகோர்த்துள்ளதுடன் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக குளிர்மையை வழங்கும் பங்காளராக ஹெக்ஸ் இணைந்துள்ளது. மோட்டார் சைக்கிள் பங்காளராக ஹொண்டா இணைந்துள்ளதுடன் SLCG இல் நடைபெறும் Rider Rush கேமில் வெற்றியீட்டுபவருக்கு Honda Navi ஒன்றையும் வழங்கவுள்ளது. வெள்ளி அனுசரணையாளராக MAS திகழ்வதுடன் நிகழ்வின் சினிமா பங்காளராக Majestic Cineplex இணைந்துள்ளது. உலகின் புகழ்பெற்ற சக்தியூட்டும் பானமான Red Bull ஐ பங்காளராக இணைத்துள்ளது.

இரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக வானொலித்துறையில் புகழ்பெற்றுத்திகழும் YES FM வானொலி உத்தியோகபூர்வ வானலை பங்காளராக இணைந்துள்ளது. Readme (Online Media Partner), Pulse.LK (Lifestyle Partner), Pyxle (Digital Agency) மற்றும் Valve (Tournament License Partner) போன்றனவும் இந்நிகழ்வுக்கு அனுசரணை வழங்குகின்றன.

இந்த நிகழ்வு தொடர்பில் மேலதிக விவரங்கள் மற்றும் எவ்வாறு பங்குபற்றுவது தொடர்பில் அறிந்து கொள்ள www.slcg.lk மற்றும் https://www.facebook.com/geekinitiativelk ஆகியவற்றை பார்வையிடவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right