கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை டிசம்பர் மாதம் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் போது 800 மில்லியன் பெறுமதியான துப்பாக்கி துளைக்காத வாகனொமொன்றை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில்  வாக்குமூலமளிப்பதற்காக நிதிமோசடி விசாரணைப்பிரிவில்  இன்று ஆஜராகிய போது இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.