உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்கும் அமெரிக்கா

Published By: Nanthini

13 Nov, 2022 | 12:19 PM
image

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பித்த போர் 8 மாதங்களை கடந்து தொடர்ச்சியாக நீடித்து வருகிறது. 

இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னபின்னமாகியுள்ளன. பல நகரங்களை ரஷ்யா தன்வசப்படுத்தியுள்ளது.

ஆனாலும், உக்ரைன் இராணுவம் துணிச்சலுடன் தொடர்ந்து ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றது.

உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் பல மேற்கத்தேய நாடுகள் இராணுவம் மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை செய்து வருகின்றன.

அந்த வகையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா பல ஆயிரம் கோடி மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் 400 மில்லியன் டொலர் மதிப்புடைய இராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பவுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்தார். 

புதிதாக வழங்கப்படும் இந்த இராணுவ உதவித் தொகுப்பில் முதல் முறையாக அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பு, ரஷ்யாவுக்கு எதிரான தனது பதில் தாக்குதலில் உக்ரைன் வெற்றிகரமாக பயன்படுத்தி வரும் ஹிமார்ஸ் எனப்படும் அதீத சக்தி கொண்ட பீரங்கி ரொக்கெட் அமைப்பு உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே உக்ரைனுக்கு வழங்குவதற்காக தென்கொரியாவிடம் இருந்து சுமார் ஒரு லட்சம் ஹோவிட்சர் பீரங்கி குண்டுகளை அமெரிக்க வாங்கவுள்ளதாகவும், இது தொடர்பில் அமெரிக்கா, தென்கொரியா அரசுகள் சில காலமாக ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்க இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52