(சசி)

பொத்துவில் பிரதான வீதியில் அமைந்துள்ள இந்த மணிக்கூட்டு கோபுரத்தின் மாணிக்கூட்டை காணவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு பொத்துவில் பிரதேச சபை ஊடாக இந்த மணிக்கூட்டு  கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிக்கூட்டு கோபுரத்தை பாரிய சிரமத்துக்கு மத்தியில் மக்களின் போராட்டங்கள் மூலம் ஒரு டிஜிட்டல் மணிக்கூடும் இதில் இருந்தது .

இந்த மணிக்கூடானது சுமார் 8 மாதங்கள் மட்டுமே இயங்கியதாகவும் இந்த மாணிக்கூட்டுக்கு  என்ன நடந்தது அல்லது திருட்டு போனதா என்று தெரியாமல் உள்ளதாக கூறப்படுகின்றது .

தற்போது இந்த மணிக்கூடு தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .

இந்த மணிக்கூட்டு கோபுரம் மூலம் மக்கள் பயனடைவதாகவும் இதை அண்மித்த பகுதியில் ஆலயங்கள் வைத்தியசாலைகள் போன்ற முக்கிய இடங்கள் உள்ளமையால் இது தொடர்பாக கவனம் செலுத்துமாறு அனைத்து தரப்பினரையும்  பொத்துவில் கிராமவாசிகள் கேட்க்கின்றனர்.