ஈரான் ஹிஜாப் விவகாரம்: ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் விவாதிக்க வேண்டுமென 12 நாடுகள் கோரிக்கை

By Nanthini

12 Nov, 2022 | 02:56 PM
image

ரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக பேசியதாக கடந்த செப்டெம்பர் மாதம் தலைநகர் தெஹ்ரானில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட மாஷா அமினி (22) எனும் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

பொலிஸார் தாக்கியதால் அவர் பலியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை கண்டித்து ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்தது. 

இதில் பங்கேற்ற பெண்கள் ஹிஜாப் உடையை கிழித்தும் எரித்தும் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே நடந்த மோதலில் பலர் கொல்லப்பட்டனர். 

இந்த மோதலில் 185 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர்களில் 19 பேர் குழந்தைகள் என்றும் ஈரான் மனித உரிமைக் குழு தெரிவித்துள்ளது. 

எனினும், இந்த தகவல்களை ஈரான் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இந்நிலையில் ஈரான் போராட்ட வன்முறை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை விவாதம் நடத்த 12 நாடுகளின் சார்பில் ஜெர்மனி மற்றும் ஐஸ்லாந்து நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. 

இந்த நாடுகளின் தூதர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஐ.நா. மனித உரிமைகள்  ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளது.

அதில் ஈரான் இஸ்லாமிய குடியரசில், பெண்கள் மற்றும் குழந்தைகளை பொறுத்தவரையில், மனித உரிமை மீறல்கள் மோசமாக இடம்பெற்று வருவதாகவும், அங்கு நிலைமையை சீர்செய்ய, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வாக்களிக்கும் உரிமை உள்ள உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பகுதியினர் இந்த முன்மொழிவை ஆதரித்துள்ளனர்.

மேலும், இந்த அமர்வுக் கூட்டம் எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதி நடத்தப்பட வேண்டும் எனவும் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் உள்நாட்டு தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் கூட்டத்தை கூட்டுவதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி

2023-02-05 12:20:09
news-image

புட்டினின் நாஜி கருத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர்...

2023-02-04 12:05:39
news-image

அசாம் மாநிலத்தில் சிறுமிகள் திருமணம் தொடர்பில்...

2023-02-03 16:40:28
news-image

அதானி குழும விவகாரம் | சுதந்திரமான...

2023-02-03 15:59:31
news-image

தென் கொரியாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு 2...

2023-02-03 14:45:41
news-image

ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் வாழிடமாகும் அசாம் காசிரங்கா...

2023-02-03 15:35:16
news-image

அபுதாபியிலிருந்து கேரளா நோக்கி பறந்த விமான...

2023-02-03 12:44:12
news-image

ஹரியானா - குர்கானில் திபெத்திய அகதிகள்...

2023-02-03 13:12:36
news-image

மீண்டும் 15% சரிவை சந்தித்த அதானி...

2023-02-03 12:52:25
news-image

காஷ்மீரில் குண்டுவெடிப்புகளில் தொடர்பு - தீவிரவாதியாக...

2023-02-03 12:12:52
news-image

சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக அழுத்தம் பிரயோகிக்க...

2023-02-03 12:46:00
news-image

தனது வெற்றிக்கு மோடி காரணம் என்பதை...

2023-02-03 11:12:17