(எம்.எம்.சில்வெஸ்டர்)
புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் சட்டத்தின்படி புகையிலை நிறுவனமொன்றின் அல்லது மதுசார நிறுவனமொன்றின் பெயரை விளையாட்டு, கல்வி சம்பந்தப்பட்ட பொது நிகழ்வுகளில் அமைச்சரொருவர் நன்றி தெரிவிக்க முடியாது என்பதுடன் அந்த நிறுவனங்களிடமிருந்து அனுசரணையைக் கூட பெற்றுக்கொள்ள முடியாதென மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் பணிப்பாளர் புபுது சமரசேகர தெரிவித்தார்.
எனினும், நிகழ்வொன்றின்போது துறைசார் அமைச்சர் குறித்தவொரு பியர் நிறுவனத்தின் பெயரை கூறி, அந்நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்கு நன்றி தெரிவித்திருந்தாக புபுது சமரசேகர சுட்டிக்காட்டினார்.
இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
"இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் தேவைகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் சிகரட் மற்றும் மதுபானம் ஆகியவற்றில் அவர்களின் அதிகம் நாட்டம் காணப்படவில்லை எனவும், நகரங்களில், தெருக்களில் வீதி வரை படங்களுக்கான தேவை , போக்குவரத்து வசதி போன்றவையே அவர்களின் அதிகபடியான தேவையா உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சிகரெட் மற்றும் மதுபானம் ஆகியவற்றின் விலை அதிகரிப்பினால் நாட்டின் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் என அது சம்பந்தப்பட்டவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும்,
சிகரெட்டுக்கு விதிக்கப்படும் வரியை அதிகரிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். சிகரெட் மீதான வரி கொள்கை மாற்றப்பட வேண்டும். எமது நாட்டில் கிடைக்கும் வருமானத்தை வேறு நாடுகள் சுரண்டிச் செல்வதற்கு இடமளிக்க கூடாது" என்றார்.
அதிபடியான வரி ஈட்டிக்கொள்வதால் நாட்டில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுப்பதற்று ஏனைய நாடுகளிடம் கடன் வாங்க வேண்டிய தேவை இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM