(எம்.எம்.சில்வெஸ்டர்)
இராசயன உரங்கள் மற்றும் பிற விவசாய இரசாயனங்கள் மீதான குறுகிய கால தடைக்கு மத்தியில் இவ்வாண்டில் மதிப்பிடப்பட்டிருந்த 260 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தியை எட்ட முடியாமல் போனதாகவும், 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் 300 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை உற்பத்தி செய்து மீண்டு எழுவோம் என இலங்கை பெருந்தோட்ட சங்கத்தினர் ( The Planter's Association) நம்பிக்கை தெரிவித்தனர்.
இவ்விடயம் குறித்து கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவித்தா அச்சங்கத்தின் தலைவர் சேனக்க அலவத்தேகம,
"தற்போதைய நிலைமைகள், உரப் பிரச்சினை மற்றும் பிற காரணிகளால், 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சுமார் 260 மில்லியன் கிலோகிராம் தேயிலையை எதிர்பார்க்கிறோம்.
2023 ஆம் ஆண்டில், 300 மில்லியன் கிலோகிராம் மொத்த உற்பத்தியை எதிர்பார்க்கிறோம். ஏனைய விவசாய இரசாயனங்களும் மீண்டும் கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது.
எவ்வாறாயினும், தேயிலை ஏற்றுமதி வருமானம் 2021 இல் பதிவான 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில்,
அதிக விலைகள் காரணமாக, இந்த ஆண்டு 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக சிறிதளவு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான எதிர்பார்க்கப்படும் 260 மில்லியன் கிலோகிராம் உற்பத்தியானது 2021 இல் பதிவு செய்யப்பட்ட 299.33 மில்லியன் கிலோகிராம் உற்பத்தியிலிருந்து கணிசமாகக் குறைவாக உள்ளது.
தோட்டங்களுக்கு இரசாயன உரங்கள் கிடைக்க ஆரம்பித்துள்ள போதிலும், உரங்கள் அதிக விலைக்கே கிடைக்கப் பெறுகிறது "என்றார்.
இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக, பிரபலமான களைக்கொல்லியான கிளைபோசைட்டை அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPC) பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிளைபோசேட் மீதான தடையை தளர்த்திய போதிலும், களைக்கொல்லியின் பாவனை, விநியோகம் மற்றும் இறக்குமதியை தடை செய்து வெளியிடப்பட்டுள்ள சுமார் 16 வர்த்தமானி அறிவித்தல்களை அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும் என அலவத்தேகம சுட்டிக்காட்டினார்.
“தடையின் உட்பொருளை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். தடையை தளர்த்துவதற்கு அரசாங்கமும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரும் எமக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM