(லியோ நிரோஷ தர்ஷன்)
சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வரும் அரசாங்கம், மறுபுறம் கடன் மறுசீரமைப்பு குறித்து இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் கலந்துரையாடி வருகின்றது.
அந்த வகையில் அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து கண்காணிக்கவும், தேவையான ஒத்துழைப்புகளை வழங்கவும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் கொழும்பில் அரச தரப்புடன் தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனடிப்படையில் இலங்கையின் நிதி கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் தேசிய நிதி கட்டமைப்பின் பிரதான 13 விடயங்களுக்கு ஒத்துழைப்பை வழங்க சர்வதேச நாணய நிதியம் முன்வந்துள்ளதுடன், அவற்றை நிறைவேற்றுவதற்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க தலைமையிலான அரச தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த 13 விடயங்களுக்கான ஒத்துழைப்புகள் குறித்து பேசப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஒத்துழைப்புகளை வழங்கும் வகையிலேயே கொழும்புக்கான விஜயம் அமைந்துள்ளதுடன், இலங்கையின் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையிலான பரிந்துரைகளையே முன்வைத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி பிரதிதிநிகள் அரச தரப்பினருக்கு குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்துள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி பிரதிதிநிகள் அரச நிதி கட்டமைப்பின் பல்வேறு தரப்பினர்களுடன் தொடர் பேச்சுவார்த்தைகளை கடந்த இரு வாரங்களாக முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த பேச்சுவார்த்தைகளின் இணக்கப்பாடுகளின் வெளிப்பாடுகளாக 13 விடயங்களும் அதற்கான பரிந்துரைகளையும் முன்வைக்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.
அதன் பிரகாரம், கடன் மறுசீரமைப்புக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பு, வரவு – செலவு திட்டத்துக்கான முன்மொழிவுகள், நாட்டின் நிதி நிர்வாக கட்டமைப்புக்கான ஒத்துழைப்புகள், இதனூடாக நிதி கட்டமைப்பின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தல், சிறந்த நிதி நிர்வாகத்துக்கான ஒத்துழைப்புகள், வரி நிர்வாக கொள்கையை உருவாக்குதல், அரச – பொது கொள்முதல் செயற்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உருவாக்குதல், அரச செலவீனங்களை நிர்வகித்தல், ஊழல் மற்றும் மோசடிகளை ஒழித்தல், மத்திய வங்கியின் நிதியை சார்ந்துள்ள பொது நிறுவனங்களை குறைத்தல், அரச நிறுவன அமைப்புகளின் ஆபத்தை குறைத்தல், நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்தல், இறக்குமதி – ஏற்றுமதி வரிகளுக்கு முறையான திட்டத்தை அமைத்தல், சர்வதேச முதலீடுகளுக்குள்ள தடைகளை நீக்குதல், போக்குவரத்து மற்றும் எரிசக்தி துறையை புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற்றுதல் மற்றும் உண்மையாகவே அரச உதவிகள் தேவைப்படும் மக்களை கண்டறிதல் ஆகிய 13 விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM