வெளவால் சூப் அருந்திய பெண் கைது: 5 வருட சிறையை எதிர்நோக்குகிறார்

By Sethu

11 Nov, 2022 | 04:01 PM
image

வெளவால் சூப் அருந்தி வீடியோ வெளியிட்ட தாய்லாந்து யுவதியொருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

உலகை நிலைகுலைய வைத்த கொவிட்-19 பெருந்தொற்றுக்கு காரணமான வைரஸ் வெளவாலிலிருந்து பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பொன்சனோக் ஸ்ரீசுனக்லுவா எனும் யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். உணவுகள் தொடர்பான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுபவர்; ஸ்ரீசுனக்லுவா. பேஸ்புக்கில் அவரை 392,000 பேர் பின்தொடர்கின்றனர்.

தூன் வெளவால் சூப் அருந்தும் காட்சி அடங்கிய வீடியோவை கடந்த திங்கட்கிழமை சமூக வலைத்தளங்களில் ஸ்ரீசுனக்லுவா வெளியிட்டார்.

தாய்லாந்து வடபகுதியில், லாவோஸ் எல்லை அருகிலுள்ள சந்தையொன்றிலிருந்து வெளவால்களை அவர் வாங்கி வந்தார் என செய்தி வெளியாகியுள்ளது.

தான் முதல் தடவையாக வெளவாலை உட்கொள்வதாகவும் அது சுவையாக உள்ளதாகவும்  ஸ்ரீசுனக்லுவா கூறியிருந்தார்.

கொரோனா வைரஸை பரப்புவதற்கு தான் முயற்சிக்கவில்லை எனவும், அப்பிரதேசத்திலுள்ள  குடியிருப்பாளர்களும் வெளவால்களை உட்கொள்வதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், பொன்சனோக் ஸ்ரீசுனக்லுவாவை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

அவர் குற்றவாளியாக காணப்பட்டால் 5 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவுஸ்திரேலிய கடற்கரையில் நிர்வாணமாக திரண்ட கூட்டம்...

2022-11-27 15:57:42
news-image

140 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்ட பறவை...

2022-11-28 09:09:26
news-image

உல்லாசக் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த இளைஞர்...

2022-11-26 19:50:58
news-image

வரலாற்றில் இன்று - மிரபால் சகோதரிகள்...

2022-11-25 13:00:05
news-image

195 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக...

2022-11-24 18:27:49
news-image

 உலகின் வயதான பூனை : கின்னஸ்...

2022-11-24 17:31:12
news-image

30 கிலோ எடையுள்ள கோல்ட்பிஷ் மீன்...

2022-11-22 11:35:44
news-image

7,800,000 ஆண்டுகளுக்கு முன்பே உணவை சமைத்து...

2022-11-21 12:05:08
news-image

சக்கரக்கதிரையின் சக்கரங்களில் ஒளித்து போதைப்பொருளை கடத்த...

2022-11-17 16:05:32
news-image

உலகின் 800 ஆவது கோடி குழந்தை...

2022-11-17 12:54:03
news-image

ஸ்டீவ் ஜொப்ஸின் பழைய பாதணி 8...

2022-11-16 11:34:57
news-image

மிக நீளமான மூக்கு கொண்ட மனிதர்

2022-11-15 17:44:46