அரசியலமைப்புப் பேரவைக்கான உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகருக்கு வழங்க  இணக்கம்

Published By: Digital Desk 3

11 Nov, 2022 | 04:03 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய அரசியலமைப்புப் பேரவைக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகருக்கு விரைவாக வழங்க பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இணக்கம் தெரிவித்தனர்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அரசியலமைப்புப் பேரவையை ஸ்தபாபிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட இரண்டு கலந்துரையாடல்கள் நேற்றும்,நேற்று முன்தினமும் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய அரசியலமைப்புப் பேரவைக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகருக்கு விரைவாக வழங்க பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இணக்கம் தெரிவித்தனர்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத மூன்று உறுப்பினர்களை அரசியலமைப்புப் பேரவையின் அங்கத்தவர்களாக நியமிப்பதற்கு விண்ணப்பம் கோரி பத்திரிகை விளம்பரமொன்றை வெளியிடுவதற்கும், விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கும் இரண்டு வார காலவகாசத்தை வழங்குவதற்கு இதன்போது உடன்பாடு எட்டப்பட்டது.

அதற்கமைய பத்திரிகை விளம்பரத்தை தினசரி மற்றும் வார இறுதி பத்திரிகைகளின் பிரசுரிப்பதுடன், விண்ணப்பப் பத்திரத்தின் மாதிரி பாராளுமன்ற உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல்கள் : மனித...

2026-08-09 16:46:48
news-image

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது அதிகரிப்பு ஜனநாயகத்திற்கு...

2026-08-09 17:28:02
news-image

நாமல் ராஜபக்‌ஷக்கு சிறைச்சாலைகளில் அதிக வாக்குகள்:...

2026-08-09 17:51:42
news-image

தென் கொரியாவில் மத சுதந்திரம், கருத்துச்...

2026-08-09 22:16:45
news-image

அரசியலமைப்பு திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது...

2026-08-09 17:53:18
news-image

மாகாண சபை தேர்தல் தாமதத்திற்கு எல்லை...

2026-08-09 17:56:52
news-image

எந்தவொரு வரைவு ஆவணமும் உருவாக்கப்படவில்லை: சிறிதரனுக்கு...

2026-08-09 17:53:01
news-image

நாமல் ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல்...

2026-08-09 20:19:40
news-image

சுற்றுலா வீசாவில் வந்து சட்டவிரோதமாகப் பணியாற்றிய...

2026-08-09 18:04:26
news-image

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக...

2026-08-09 17:33:26
news-image

சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார், கட்டார்...

2026-08-09 17:16:31
news-image

அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாயவில்...

2026-08-09 16:37:05