துரை ரட்ணசிங்கம் கல்வித்துறைக்கு ஆற்றிய சேவை நினைவுபடுத்தப்பட வேண்டும் - மஹிந்த ராஜபக்ஷ

Published By: Nanthini

11 Nov, 2022 | 04:00 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரை ரட்ணசிங்கம் கல்வித்துறைக்கு ஆற்றிய சேவை நினைவுபடுத்தப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (நவ 11) இடம்பெற்ற அனுதாப பிரேரணையில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 

காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் துரை ரட்ணசிங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினராக  பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார். 

அரசியலுக்கு பிரவேசிப்பதற்கு முன்னர் இவர் கல்விச் சேவையில் ஈடுபட்டிருந்தார்.

2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்ட மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்கு தெரிவானார். தனிப்பட்ட காரணிகளினால் அவர் 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை.

கொவிட் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் கடந்த ஆண்டு உயிரிழந்தார். 

கல்வித்துறைக்கு இவர் ஆற்றிய சேவையை நினைவுபடுத்த வேண்டும்.

அதேபோல் காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திரகுமார விஜய குணவர்தன, டி.பி. ஏக்கநாயக்க மற்றும் பத்தேகம சமித்த தேரர் ஆகியோர் நாட்டுக்காக அரசியலில் ஈடுபட்டார்கள். இவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்துக்கொள்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44