(எம்.எம்.சில்வெஸ்டர்)
சிகரெட்டுக்கு விதிக்கப்படும் வரியை அதிகரிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். தற்போது அறவிடப்படும் சிகரெட்டுக்கான வரி முறையும் தவறானது.
கடந்த சில ஆண்டுகளாக முறையான விதத்தில் சிகரெட்டுக்கான வரி அதிகரிக்கப்படாமையின் காரணமாக இலங்கைக்கு கிடைக்கவேண்டிய சுமார் 100 பில்லியன் ரூபா வருமானம் இழக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளிடமிருந்து கடன்களை பெறாது குறித்த தொகையைக் கொண்டு நாட்டில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருக்க முடியும் எனவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (Alcohol and Drug Information Centre - ADIC) சுட்டிகாட்டியுள்ளது.
வரியை அதிகமாக அறவிட வேண்டிய இடங்களில் அதிகளவான வரியை அறவிடாது, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், மருந்து வகைகள் உள்ளிட்ட அத்தியவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அதிகளவான வரிகளை அறவிடுவது தவறாகும்.
இவ்வாறு அதிகப்படியான வரி அறவீட்டு காரணமாக நாட்டு மக்கள் பெரும் பொருளாதார சிக்கல்களுக்கு எதிர்கொண்டு வருவதாக அந்நிலையத்தின் பணிப்பாளர் புபுது சமரசேகர தெரிவித்தார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
" இலங்கையில் காணப்படும் சிகரெட் நிறுவனம், சிலோன் டொபேக்கோ கம்பனி என்ற பேரில் பெயரளவில் மாத்திரமே காணப்படுகிறது.
அதன் 84 வீதமான பங்குகள் பிரிட்டிஷ் அமெரிக்கன் புகையில் கம்பனிக்கே சொந்தமாகவுள்ளது. இதனால் சிகரெட் மூலமாக கிடைக்கப்பெறும் அதிகமான வருமானம் வெளிநாடுகளுக்கு சென்றடைகின்றது. முறையற்ற வரி காரணமாக அரசாங்கத்திற்கும் குறைந்தளவு வரி வருமானமே கிடைக்கிறது.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சிகரெட்டுக்கான வரியை குறைந்தது 20 ரூபாவினால் அதிகரித்து, நாட்டின் வருமானத்தைப் பெருக்கும் விஞ்ஞான வரிக் கொள்கை பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும். இவ்விடயம் குறித்து நிதி அமைச்சிடம் கலந்துரையாடல்கள் மேற்கொண்டு அறிக்கைளை சமர்ப்பித்துள்ளோம்.
கடந்த சில ஆண்டுகளாக, முறையான முறையில் சிகரெட்டுக்கான வரி அதிகரிக்காததன் காரணமாக, இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய ரூபா 100 பில்லியன்களை இழந்துள்ளது.
சிகரெட்டின் விலை அதிகரிக்கப்பட்டதன் மூலமாக பிரிட்டிஷ் அமெரிக்க புகையிலை நிறுவனம் இலாபம் ஈட்டியதே தவிர இலங்கை அரசாங்கம் அதிக இலாபத்தை ஈட்டவில்லை.
ஆகவே, புகையிலை நிறுவனங்கள் நாட்டிலிருந்து அதிக வருமானத்தை சுரண்டுவதை தவிர்த்து, அரசாங்கம் அதிக இலாபத்தை ஈட்டிக்கொள்வதற்கான சிறந்த வரிக் கொள்கையை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.
தற்போது, இலங்கை ஒரு முக்கியமான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. மேலும் நாட்டின் நீண்ட கால நிதிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்தின் அவசர, கடினமான ஆனால் அவசியமான கொள்கைத் தீர்வுகள் இருந்தபோதிலும், புகையிலை வரிகள் போதுமான அளவு அதிகரிக்கப்படாதது ஆச்சரியமளிக்கிறது.
குறிப்பாக, அரசின் வருமானத்தை அதிகரிக்கக் கூடிய, எளிய மற்றும் சாதாரண மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தாத, இந்தத் துறைகளில் கவனம் செலுத்துவதே ஒரு அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
சிகரட் மீதான வரியை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க முடியும், அதிகளவான வரிப்பணத்தை ஒரே தடவையில் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் அதனை அமுல்படுத்தாமல் இருப்பதானது வியப்புக்குரியதாகும் " என்றார்.
கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனம் (IPS),மதுசாரம் மற்றும் புகையிலை மீதான அதிகார சபை (NATA) மற்றும் துறை சார்ந்தவர்களின் கூற்றுப்படி, ஏற்கனவே முன்மொழியப்பட்ட புகையிலை வரி முறையைப் பின்பற்றி, அனைத்து வகையான சிகரட்டுகளுக்கும் ஒரே வரி முறையை அறிமுகப்படுத்தினால், அரசாங்கம் சுமார் 40 பில்லியன் ரூபாவை கூடுதல் வரி வருமானத்தை ஈட்ட முடியும். எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மேற்படி வரிவிதிப்பு முறைமையை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டுமென மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் அரசாங்கம் நிலையம் வலியுறுத்துகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM