கடும் மழையால் நீரில் மூழ்கியது அம்பாறை மாவட்டம்

By Vishnu

11 Nov, 2022 | 01:42 PM
image

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அக்கரைப்பற்று நிந்தவூர் நாவிதன்வெளி சம்மாந்துறை பிரதேச பகுதிகளில் வாழும் மக்கள் மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மழை வெள்ளத்தின் காரணமாக இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை பாண்டிருப்பு நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு  காரைதீவு சம்மாந்துறை அக்கரைப்பற்று பகுதிகளில்  இப்பிரதேசத்தில் பல குடும்பங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளநிலையில், மக்கள்  வீடுகளிற்குள் மழை வெள்ளம் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு காரணம் மழை நீர் வழிந்தோடுவதற்குரிய முறையான வடிகான் இன்மையே முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டும் மக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி பிரதேசங்கள் ஒவ்வொரு வருடமும் மழையினாலும் அதனால் ஏற்படும் வெள்ளத்தினாலும்  பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலை தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது குறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அன்றாட உணவுகளை சமைத்து உண்ண முடியாத நிலையில் மக்கள் காணப்படுகின்றனர். 

தற்போது வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக சில முகத்துவாரங்கள்  வெட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் வெள்ள நீர் தேங்கி காணப்படுகின்ற நிலைமையே தொடர்கதையாகவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுபான்மை பிரதிநிதிகளிடையே முக்கிய உரையாடல் அடுத்த...

2023-02-05 17:43:18
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளை தனித்து செயற்பட...

2023-02-05 17:44:22
news-image

இலங்கையின் கிராமப் புற அபிவிருத்திக்கு இந்தியாவின்...

2023-02-05 17:41:37
news-image

அரசாங்கத்திடம் ஸ்திரமான பொருளாதாரக் கொள்கைகள் கிடையாது...

2023-02-05 17:32:24
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு 10...

2023-02-05 17:35:04
news-image

அரசியலமைப்பு பேரவை மூன்றாவது தடவையாக திங்கள்...

2023-02-05 14:39:41
news-image

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம்...

2023-02-05 18:01:18
news-image

ராஜபக்சவின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிப்போம் -...

2023-02-05 17:21:35
news-image

தேர்தலுக்கு அச்சமில்லை : தேர்தல் செலவுகளுக்கு...

2023-02-05 17:18:20
news-image

கஜமுத்துக்களை விற்க முயன்ற இளைஞன் கல்முனையில்...

2023-02-05 17:34:01
news-image

இரட்டை பிரஜா உரிமை உடையவர்கள் தொடர்பில்...

2023-02-05 12:55:22
news-image

ஹோட்டல் உரிமையாளரின் மனைவியுடன் மகன் தொடர்பு...

2023-02-05 17:40:33