வா வாத்தி: தனுஷின் 'வாத்தி' பட சிங்கிள் ட்ரக் பாடல் வெளியீடு

By Nanthini

11 Nov, 2022 | 01:47 PM
image

'தென்னிந்திய புரூஸ் லீ' என்றழைக்கப்படும் நடிகர் தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள 'வாத்தி' படத்தில் இடம்பெற்ற முதல் பாடலுக்கான பாடல் வரிகள் அடங்கிய பிரத்தியேக காணொளி வெளியாகியிருக்கிறது.

தெலுங்கின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகியுள்ள புதிய திரைப்படம் 'வாத்தி'.

இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்திருக்கிறார். 

இவர்களுடன் சாய் குமார், சமுத்திரக்கனி,  ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்டை ராஜேந்திரன், ஹரிஷ் பெராடி, பிரவீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ஜே. யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். 

கல்வித்துறையில் நடைபெறும் மோசடிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த க்ரைம், த்ரில்லர் படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஃபோர்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் எஸ். நாகவம்சி, சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தில் இடம்பெற்ற சிங்கிள் ட்ரக் வெளியாகி இருக்கிறது. 

இந்தப் பாடலை நடிகரும் இயக்குநருமான தனுஷ் எழுத, பின்னணி பாடகி ஸ்வேதா மோகன் பாடியிருக்கிறார். 

'ஒரு தல காதல தந்து...' என தொடங்கும் இந்தப் பாடல் மெல்லிசையுடன் கூடிய லிரிக்கல் வீடியோவாக வெளியாகியிருப்பதால் தனுஷ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி' வாணி...

2023-02-04 16:05:03
news-image

குத்தாட்ட நடிகையான ரித்திகா சிங்

2023-02-04 13:31:25
news-image

தலைக்கூத்தல் - திரை விமர்சனம்

2023-02-03 17:33:34
news-image

இயக்குநரும், நடிகருமான கே. விஸ்வநாத் மறைவு

2023-02-03 16:37:15
news-image

நடிகர் மகத் ராகவேந்திரா நடிக்கும் 'காதல்...

2023-02-03 13:29:14
news-image

தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் நடிக்கும்...

2023-02-03 13:29:59
news-image

சிலம்பரசன் நடிக்கும் 'பத்து தல' படத்தின்...

2023-02-03 13:30:40
news-image

பிரபுதேவா நடிக்கும் 'வுல்ஃப்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்...

2023-02-03 13:31:10
news-image

மீண்டும் வலைத்தள தொடரில் நடிக்கும் சமந்தா

2023-02-02 12:46:37
news-image

மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியாகும் 'கிறிஸ்டி'...

2023-02-02 12:08:57
news-image

'தளபதி 67' படத்தின் தொடக்க விழா...

2023-02-02 11:48:28
news-image

சந்தானம் நடிக்கும் 'கிக்' படத்தின் மூன்றாவது...

2023-02-02 11:48:09