மாணவர்களுக்கு வழங்கப்படும் பகல் உணவை இரட்டிப்பாக்க நடவடிக்கை : கல்வி அமைச்சர்

Published By: Digital Desk 2

11 Nov, 2022 | 02:08 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

நாட்டில் வறுமை நிலை அதிகரித்துள்ளதால் ஆகாரம் பெற்றுக்கொள்ளாத மாணவர்களின் வீதம் ஏனைய காலங்களைவிட அதிகரித்துள்ளது.

அதனால் மாணவர்களுக்கு வழங்கப்படும் பகல் உணவை இரட்டிப்பாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவித்த கருத்து பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் இருக்கும் மொத்த அரச பல்கலைக்கழங்களில் ஒரு இலட்சத்தி 40ஆயிரம் மாணவர்கள் இருக்கின்றனர். இவர்களில் ஒருஇலட்சத்தி 10ஆயிரம் மாணவர்களுக்கு மகபொல உதவித்தொகையாக 5500ருபா வழங்கப்படுகின்றது.

அதனுடன் மேலதிகமாக 500ரூபா வழங்கப்படுகின்றது. நான் இந்த பதவிக்கு வருவதற்கு முன்னர் 3மாதங்கள் நிலுவை இருந்தது.

ஆனால் அந்த நிலுவை முடிந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வழங்கி வருகின்றோம். இது தொடர்பாக திறைசேரி, நிதி அமைச்சுடன் நான் கலந்துரையாடி நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.

Susil Premajayantha removed from state ministerial post

அத்துடன் மாணவர்களின் போஷாக்கு தொடர்பாக கல்வி அமைச்சில் தனிப்பிரிவு இருக்கின்றது. அதன் பிரகாரம் தொகுதி, வலயம் மற்றும் மாகாண மட்டத்தில் மாதாந்தம் மாணவர்களின் போஷாக்கு தொடர்பான அறிக்கை பெற்று வருகின்றோம்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் வறுமை நிலை அதிகரிப்பு காரணமாக ஏனைய காலங்களைவிட மாணவர்களுக்கு ஆகாரம் கிடைக்காத நிலையே இருக்கின்றது.

அத்துடன் மாணவர்களுக்கு பகல் உணவு வழங்கும் நடவடிக்கை கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்காக வருடாந்தம் 4பில்லியன் ருபா ஒதுக்கப்படுகின்றது.

அதில் மாணவர் ஒருவருக்கு 60 ரூபாவரை செலவிட முடியும். அந்த தொகையை 75ரூபாவரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அதேநேரம் இந்த தொகைக்கு மேலதிகமாக ஆசிய அபிவிருத்தி வங்கி, சீனாவின் உதவி மற்றும் ஏனைய நன்கொடைகள் ஊடாக மொத்தமாக 11 இலட்சம் பேருக்கு பகல் உணவு வழங்கி வருகின்றோம். இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். 

அத்துடன் இதுதொடர்பாக தனி நிதியம் அமைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கின்றார். அதுதொடர்பாக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-03-17 06:34:21
news-image

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்...

2025-03-17 05:07:05
news-image

விஜயகுமாரதுங்க உட்பட முக்கிய படுகொலை அறிக்கைகளை...

2025-03-17 04:56:54
news-image

பட்டலந்த சித்திரவதை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை...

2025-03-17 05:00:32
news-image

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட வேண்டும்;...

2025-03-17 04:49:16
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை : ...

2025-03-17 04:45:11
news-image

ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக்...

2025-03-16 16:20:41
news-image

அமைச்சர் நளிந்த வரலாற்றை மறந்துவிட்டார் :...

2025-03-16 20:34:58
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :சட்டமா...

2025-03-16 17:16:42
news-image

நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கத்தினர்;...

2025-03-16 22:15:49
news-image

அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதாளக்...

2025-03-16 17:16:18
news-image

வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும்...

2025-03-16 21:24:04