வெள்ளத்தால் 32 குடும்பங்கள் கிளிநொச்சி காஞ்சிபுரம் பகுதியில் பாதிப்பு

Published By: Vishnu

11 Nov, 2022 | 02:04 PM
image

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காஞ்சிபுரம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 32 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக சில வீடுகளிற்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.

இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். இதேவேளை போக்குவரத்து செய்வதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கிராமத்தை 6 மாதங்களாக கிராம சேவையாளர் கண்காணிக்கவில்லை எனவும், வெள்ளம் தொடர்பில் அறிவிக்க அழைப்பு ஏற்படுத்திய போதும், அழைப்பினை ஏற்கவில்லை எனவும் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், பிரதேச செயலாளருக்கு மக்கள் தகவல் வழங்கியுள்ளனர். கள விஜயம் மேற்கொண்ட கண்டாவளை பிரதேச செயலாளார் த. பிருந்தாகரன் ஆராய்ந்தார்.

பாதிக்கப்பட்ட மக்களிற்கு உலக தரிசனம் நிறுவனத்தின் உதவியுடன் உடனடி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் வெள்ள நீர் தேங்காத வகையில் வடிகான்களை அமைக்க மக்கள் வேண்டுகை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக...

2026-04-13 10:00:58
news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53
news-image

இன்றைய வானிலை

2026-04-13 06:09:04
news-image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததற்காக 12...

2026-04-13 01:51:29
news-image

வாழ்க்கைச் செலவு குறைக்க உடனடி நடவடிக்கை...

2026-04-12 23:59:36
news-image

பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பில் நல்லெண்ண...

2026-04-12 20:20:10
news-image

சம்பூர் கடலில் நீராடிய 19 வயது...

2026-04-12 18:57:02
news-image

புத்தாண்டு காலத்தில் பயணப் புகைப்படங்களை உடனடியாக...

2026-04-12 17:48:03