அவுஸ்திரேலிய சுகாதார நிறுவனத்திலிருந்து 97 லட்சம்பேரின் தரவுகள் திருட்டு!

By Sethu

11 Nov, 2022 | 12:12 PM
image

அவுஸ்திரேலியாவின் பிரதான சுகாதார காப்புறுதி நிறுவனமொன்றின் கணினி வலையமைப்புக்குள் ஊடுருவி, 97 லட்சம் பேரின் தரவுகளை ஊடுருவல் காரர்கள் திருடியுள்ளனர் என அவுஸ்திரேலிய பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். 

அவுஸ்திரேலிய பிரதமர் அன்தனி அல்பானீஸ் தொடர்பான தரவுகளும் இவற்றில் அடங்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய சுகாதார காப்புறுதி நிறுவனமான மெடிபேங்க் (Medibank) நிறுவனத்திடம் ரஷ்ய ஊடுருவல்காரர்கள் (ஹேக்கர்கள்) 15 லட்சம் அவுஸ்திரேலிய டொலர் கப்பம் கோரியிருந்தனர். 

இந்த கப்பத் தொகையை செலுத்துவதற்கு மெடிபேங்க் நிறுவனம் மறுத்ததையடுத்து, திருடப்பட்ட தரவுகளை ரஷ்ய ஊடுருவல்காரர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஊடுருவல்காரர்கள், ரஷ்யாவைத் தளமாகக் கொண்டவர்கள் என பொலிஸார் நம்புவதாக அவுஸ்திரேலிய பொலிஸ் ஆiணாயளர் றீஸ் சேர்ஷோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்டர்போலுடன் தாம் இணைந்துசெயற்படவுள்ளதாகவும் ரஷ்ய பொலிஸாரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் அவர்கள்  அவுஸ்திரேலிய பொலிஸ் ஆணையாளர் றீவ்ஸ் கேர்ஷோ தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டுக்கு சீனா,...

2023-01-28 12:32:23
news-image

இந்தியாவின் அபாரமான பொருளாதார வளர்ச்சியை பாகிஸ்தான்...

2023-01-28 11:10:38
news-image

வெளியானது கறுப்பின இளைஞரை பொலிஸார் கண்மூடித்தனமாக...

2023-01-28 10:02:07
news-image

ஜெரூசலேமில் யூதவழிபாட்டுதலத்தில் துப்பாக்கி பிரயோகம் -...

2023-01-28 05:06:32
news-image

கூகுளில் இருந்து 12,000 பணியாளர்கள் பணி...

2023-01-27 16:35:43
news-image

ஈரானிலுள்ள அஸர்பைஜான் தூதரகத்தில் துப்பாக்கிச் ‍சூட்டில்...

2023-01-27 15:30:03
news-image

பரீட்சை முடிவுகள் என்பது வாழ்க்கையின் முடிவல்ல...

2023-01-27 15:07:56
news-image

பிரிட்டனில் இரு பெண்களை வல்லுறவுக்குட்படுத்திய பின்,...

2023-01-27 13:27:35
news-image

சீன அவுஸ்திரேலிய உறவுகள் சரியான திசையில்...

2023-01-27 13:11:09
news-image

மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக் காட்டி...

2023-01-27 12:15:12
news-image

இந்திய மக்கள் மனநிலை குறித்த கருத்துக்...

2023-01-27 12:20:05
news-image

அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் தாக்கப்பட்டு உயிரிழந்தமை...

2023-01-27 11:24:42