முகத்தில் எண்ணெய் வழிந்தால்...

Published By: Devika

11 Nov, 2022 | 11:50 AM
image

சருமத்தில் எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடுகள் சீரற்ற நிலையில் இருக்கும்­போது எண்ணெய் அதிகமாக சுரக்கும். அதனால் முகத்தில் எப்போதும் எண்ணெய் தன்மை பிரதிபலித்துக்கொண்டிருக்கும்.

எண்ணெய் வழிந்த முகத்துடன் காட்சிய­ளிப்பார்கள். அத்தகைய எண்ணெய் தன்­மையை போக்கு­வதற்கு கடலை மாவு மற்றும் பச்சை பயறு மாவை பயன்­­படுத்த­லாம். 

இவை இரண்டும் எண்­ணெய் பசை சருமத்திற்கு ஏற்றது. கடலை மாவு, பச்சை பயறு மாவுடன் பன்­­னீர் கலந்து குழைத்து முகத்­தில் தடவி மசாஜ் செய்யலாம். 

15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம். வாரம் இருமுறை பயன்படுத்தி வந்தால் எண்ணெய் சருமம் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கிவிடும்.

பன்னீர், சந்தனத்தூள் மற்றும் முல்தானி­மெட்டி ஆகியவற்றை சம அளவு பசை போல் குழைத்து முகத்தில் தடவவும். பன்னீர் முகத்தை சுத்தமாக்கும்.

சந்தனம் சருமத்தை குளிர்ச்சியடையச் செய்யும். முல்தானி மெட்டி முகத்தில் உள்ள அழுக்கை போக்­குவதோடு அதிகப்படியான எண்ணெய் தன்மையை அகற்றிவிடும். 

வாரம் இருமுறை இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தி வரலாம். எண்­ணெய் சருமத்திற்கு தயிரும் சிறந்த தீர்வாக அமையும். தயிரை முகத்தில் தடவி விட்டு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடலாம். எண்­ணெய்ப்பசை தன்மை நீங்குவதுடன் சோர்­வையும் போக்கி புத்துணர்ச்சியை தரும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right