(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
சர்வதேசத்தின் முன்னிலையில் எமது நாட்டின் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அதற்கு தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால் புதிய சட்டங்களை கொண்டு வருவது அவசியம் என இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
சட்டக் கல்லூரியில் மாணவர்கள் தாய்மொழி மூலம் நுழைவுப் பரீட்சையை ஆங்கில மொழியில் எழுதுவது தொடர்பில் எடுத்திருக்கும் தீர்மானத்தை மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.
அத்துடன் ,யால சம்பவங்கள் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். ஜனாதிபதி அதனைக் கூற வேண்டும் என்றில்லை. சாதாரணமாகவே அதற்கு எதிராக பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
அதே வேளை, நாட்டில் படுகொலைகளை மேற்கொண்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது போன்ற விடயங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
ஊழல் மோசடிகள் தொடர்பில் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி சபையில் தெரிவித்திருந்தார்.
உண்மையில் எமது நாட்டின் தனித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் அதனை முன்னெடுக்க வேண்டியது அவசியம். அதற்காக நடைமுறையில் உள்ள சட்டங்கள் போதாவிட்டால் புதிய சட்டங்களை கொண்டு வந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும் நாட்டில் மனித உரிமைகளுக்கு மாறாக கைதுகள் இடம்பெறுகின்றன. பொலிஸ் சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் சுயாதீனமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு எமது நாட்டின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM