(எம்.வை.எம்.சியாம்)
அபிவிருத்தி விண்ணப்பங்களை அங்கீகரிப்பதற்கான துரித சேவையை வழங்கும் வேலைத்திட்டமொன்றினை (One Stop Unit) நகர அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்துள்ளது.
மேலும் இதன் மூலம் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குமான பூர்வாங்க திட்டமிடல் அனுமதி, கட்டிடங்களுக்கான அனுமதிகளை வழங்குதல், தகுதிச் சான்றிதழ் வழங்கல், நில உட்பிரிவுகளுக்கான அனுமதி வழங்கல் போன்ற பங்குதாரர் நிறுவனங்கள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுடன் இணைந்து 21 நாட்கள் குறைந்த காலப்பகுதியில் அனைத்து சேவைகளும் இதன் ஊடாக பெற்றுக்கொடுக்கபடவுள்ளது
இந்நிலையில், அபிவிருத்தி விண்ணப்பங்களுக்கு விரைவான அனுமதி வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்றைய தினம் பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்புடன் நடைபெற்றது.
நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் கீழ் அதன் ஒரு பகுதியாக நகர்ப்புற அபிவிருத்தி அதிகார சபையால் அறிவிக்கப்பட்ட அனைத்து நகர்ப்புறங்களிலும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டமிடல் விண்ணப்பங்களை அங்கீகரிக்கும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக இந்த விரைவுபடுத்தப்பட்ட சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக இந்த புதிய சேவை (One Stop Unit) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு நகர்ப்புற அபிவிருத்தி அதிகாரசபையானது அபிவிருத்தி அங்கீகாரத்திற்கான விண்ணப்பத்தை அறிமுகப்படுத்தியிருந்த போதிலும் .விநியோக முறையிலுள்ள குறைபாடுகள் மற்றும் பலவீனங்களை போக்குவதற்காக தற்போது (One Stop Unit) ஊடாக (Online Application System) நகர அபிவிருத்தி அதிகாரசபை அறிமுகப்படுத்தியுள்ளது.
அபிவிருத்தி விண்ணப்பங்களை கோரும் விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட பிற தரப்பு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பத்தின் முன் செயலாக்கம் தொடர்பான தயாரிப்பு அனுமதிகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்கு குறித்த சேவை அலகுப் பிரிவு செயற்படும்.
இந்நிலையில் அபிவிருத்தி விண்ணப்பங்களை அங்கீகரிப்பதற்கான பங்குதாரர் நிறுவனங்களாக 26 நிறுவகங்கள் செய்யப்படவுள்ளன.
அவற்றுள் மத்திய சுற்றாடல் அதிகாரசபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, இலங்கை மின்சார சபை, வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார (தனியார்) சபை, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம், இலங்கை முதலீட்டு சபை, புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம், இலங்கை பாராளுமன்றம், வீதி அதிகார சபை, கமநல அபிவிருத்தி சபை, கடலோர பாதுகாப்பு மற்றும் கடற்கரை வளங்கள் முகாமைத்துவ திணைக்களம், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, தேசிய ஆய்வு பணியகம், இலங்கை புகையிரத திணைக்களம், இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை, தொல்லியல் திணைக்களம், கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபை, தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந்தோட்ட(பகுதிப்படுத்தல், கட்டுப்பாட்டு) சபை, வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு, கழிவகற்றல் முகாமைத்துவ அதிகார சபை, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, தொழில் திணைக்களம், பொலிஸ் தலைமையகம் மோட்டார்திணைக்கள பிரிவு, கொழும்பு மாநகர சபை உட்பட நகர அபிவிருத்தி உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் அதன் கீழ் உள்ள விடயப்பரப்பு செயற்படவுள்ளன.
அபிவிருத்தி விண்ணப்பங்களை அங்கீகரிப்பதற்காக இந்த சேவை மூன்று கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.அதன்படி முதற்கட்டமாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் துரித சேவை அலகின் ஊடாக முன்னோடித் திட்டமாக கொழும்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன் இரண்டாவது கட்டமானது கொழும்பு மாநகர சபைகள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இணைந்துமாகவும் மேலும் மூன்றாம் கட்டமாக அனைத்து மாகாண அலுவலகங்களிலும் நகர்புறங்கள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புக்களை உள்ளடக்கும் வகையில் செயல்படுத்துவதற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின்படி 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள், 208 பிரதேச சபைகள் உள்ளடங்களாக நகர அபிவிருத்தி பிரதேசங்களாக உள்ளடக்கப்படுகின்றது.இதன் அடிப்படையில் புதிய அபிவிருத்தி விண்ணப்பங்களை கோரும் போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி பெறுவது கட்டாயமாகும்.
இந்த புதிய சேவையின் அறிமுகம் மூலம் 21 நாட்களுக்குள் அபிவிருத்தி விண்ணப்பங்களை அங்கீகரிக்கும் நேரத்தை குறைக்கவும் இதன் மூலம் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குமான பூர்வாங்க திட்டமிடல் அனுமதி, கட்டிடங்களுக்கான அனுமதிகளை வழங்குதல், தகுதிச் சான்றிதழ் வழங்கல், நில உட்பிரிவுகளுக்கான அனுமதி வழங்கல் போன்ற பங்குதாரர் நிறுவனங்கள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைந்து 21 நாட்கள் குறைந்த காலப்பகுதியில் அனைத்து சேவைகளும் இதன் ஊடாக பெற்றுக்கொடுக்க படவுள்ளது.
மேலும் 26 பங்குதாரர் நிறுவனங்களுடன் துரிதமாக செயற்பட்டு விரைவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்வைப்பதற்கு இதன் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இது தொடர்பில் மேலதிக விபரங்களைப் (One Stop Unit) பெற்றுக்கொள்ள முடியும். மேலும் www.osu.uda.lk எனும் இணையத்தள முகவரியின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM