மசகு எண்ணெய் கப்பலுக்கு செலுத்த 30 மில்லியன் டொலர் கூட அரசாங்கத்திடம் இல்லையா ? ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி

Published By: Digital Desk 2

10 Nov, 2022 | 05:21 PM
image

(எம்.மனோசித்ரா)

கடலில் 50 நாட்களுக்கும் அதிக காலம் நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பலுக்கு 7.3 மில்லியன் டொலர் தாமதக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த தொகையைக் கொண்டு எரிவாயு கப்பலொன்றை முற்பதிவு செய்திருக்க முடியும். மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு தேவையான 25 - 30 மில்லியன் டொலர் கூட அரசாங்கத்திடம் இல்லையா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வியெழுப்பினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (நவ. 10) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சீனி வரி மோசடியால் அரசாங்கம் 1600 கோடி ரூபாவை இழந்துள்ளது. இழந்துள்ள இந்த தொகையை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

9 ஆம் திகதி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திகதியாகும். நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு இந்த திகதியிலேயே பல முக்கிய சம்பவங்கள் பதிவாகின.

அதற்கமையவே இம்மாதம் 9 ஆம் திகதியும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. எனினும் பொலிஸார் அடக்குமுறைகளை பிரயோகித்து ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

சஜித்துக்கு வாய்ப்பளிக்காவிட்டால் அரசியலிலிருந்து விலகுவேன்: நளின் பண்டார  எச்சரிக்கை!!

தற்போது மக்களின் வாக்குகள் அற்றவர்களே நாட்டை ஆட்சி செய்து  கொண்டிருக்கின்றனர். இவ்வாறான நிலையிலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் காலம் தாழ்த்துவதற்கு முயற்சித்துக் கொண்டிருகின்றனர்.

தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பினருடன் எவ்வித நிபந்தனையும் இன்றி நாமும் இணைந்து குரல் கொடுப்போம்.

மாலைதீவின் சபாநாயகர் மொஹமட் நஷீட் விரைவில் இலங்கையின் அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்பட்டாலும் , அதில் ஆச்சரியப்படுதற்கு ஒன்றும் இல்லை. உள்நாட்டில் மாத்திரமின்றி , சர்வதேசமும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் உள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி முதலாவது ஆண்டு நிறைவு இன்று!

கடந்த 52 நாட்களாக மசகு எண்ணெய் கப்பல் கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளது. இந்த கப்பலிலிருந்து மசகு எண்ணெண்யை தரையிரக்குவதற்கு 25 - 30 மில்லியன் டொலர்கள் மாத்திரமே தேவையாகும்.

ஆனால் இக்கப்பலுக்கு இதுவரையில் 7.3 மில்லியன் டொலர் தாமதக்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு செலுத்தப்பட்டுள்ள தாமதக் கட்டணத்தைக் கொண்டு எரிவாயு கப்பலொன்றை முற்பதிவு செய்ய முடியும்.

இந்தியாவினால் ரஷ்யாவிடமிருந்து நேரடியாக எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியுமெனில் எம்மால் ஏன் முடியாது? இரண்டாம் தரப்பினர் ஊடாக இலங்கைக்கு ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. 

நாட்டில் தற்போது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துள்ளதாகக் காண்பிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால் இதுவரையில் எந்தவொரு பிரச்சினைக்கும் முழுமையான தீர்வு வழங்கப்படவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுக்கடை நீதிமன்ற பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-02-19 10:19:01
news-image

கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்ற ரயில்...

2025-02-19 10:29:15
news-image

மிதமான நிலையில் காற்றின் தரம் 

2025-02-19 10:24:21
news-image

களுத்துறை கொலைச் சம்பவம் : இருவர்...

2025-02-19 09:51:46
news-image

கொட்டாஞ்சேனை பகுதியில் கூரிய ஆயுதங்கங்களால் தாக்கி...

2025-02-19 09:19:14
news-image

மித்தெனியவில் துப்பாக்கிப் பிரயோகம் : தந்தையும்...

2025-02-19 07:15:06
news-image

இன்றைய வானிலை

2025-02-19 06:14:57
news-image

எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50...

2025-02-18 17:19:21
news-image

நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது சந்தர்ப்பத்தை அரசு...

2025-02-18 18:58:04
news-image

2024இல் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட...

2025-02-18 20:12:42
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-18 19:04:31
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

2025-02-18 17:24:08