(நெவில் அன்தனி)
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 8 ஆவது இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிறன்று எதிர்த்தாட இங்கிலாந்து தகுதிபெற்றது.
அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இந்தியாவை 10 விக்கெடக்ளால் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட இரண்டாவது அணியாக இங்கிலாந்து தகதிபெற்றது.
இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 169 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் முழுமையான ஆதிக்கம் செலுத்தி 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 170 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
அணித் தலைவர் ஜொஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்து அதிரடி வேகத்தில் ஓட்டங்களைக் குவித்து இருபது 20 உலகக் கிண்ண வரலாற்றில் புதிய சாதனையுடன் கூடிய 170 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தனர்.
இந்தியாவை விட மிக வேகமாக ஓட்டங்களைக் குவித்த இங்கிலாந்து பவர் ப்ளே நிறைவில் விக்கெட் இழப்பின்றி 63 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
துடுப்பாட்டத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளை எதிர்கொண்டு 7 சிக்ஸ்கள், 4 பவுண்டறிகள் உட்பட 86 ஓட்டங்களுடனும் ஜொஸ் பட்லர் 49 பந்ந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 80ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.
விராத் கோஹ்லியும் ஹார்த்திக் பாண்டியாவும் அரைச் சதங்கள் குவித்ததுடன் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணியைப் பலப்படுத்தினர்.
இந்த உலகக் கிண்ணப் போட்டியில் தனது 4ஆவது அரைச் சதத்தைக் குவித்த விராத் கோஹ்லி சரியாக 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழழந்தார்.
இதனிடையே கோஹ்லி 42ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 4,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த முதலாவது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டினார்.
மறுபக்கத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஹார்திக் பாண்டியா 33 பந்துகளில் 5 சிக்ஸ்கள், 4 பவுண்டறிகள் உட்பட 63 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஹிட்-விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.
அவர்களை விட ரோஹித் ஷர்மா 27 ஓட்டங்களையும் சூரியகுமார் யாதவ் 14 ஓட்டங்களையும் ரிஷாப் பன்ட் 6 ஓட்டங்களையும் கே. எல். ராகுல் 5 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டன் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM