நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருக்கும் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு 'சிங்கப்பூர் சலூன்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இதனை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் தன் இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
'ரௌத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா', 'ஜூங்கா' 'அன்பிற்கினியாள்' ஆகிய படங்களின் இயக்குநர் கோகுல் இயக்கியுள்ள புதிய படம் 'சிங்கப்பூர் சலூன்'.
'எல்.கே.ஜி', 'மூக்குத்தி அம்மன்', 'வீட்ல விசேஷங்க' ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் ஆர்.ஜே. பாலாஜி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் இது.
இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் எனும் நிறுவனம் சார்பில் ஐசரி கே. கணேஷ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஆர்.ஜே. பாலாஜி இணைந்து இப்படத்தின் தலைப்பினையும் முதல் பார்வையையும் வெளியிட்டனர்.
ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தாடியுடனும், திருத்தப்படாத சிகை அலங்காரத்துடனும் சிகையலங்கார நிபுணராக தோன்றுகிறார்.
அத்துடன் சிகையலங்காரத்தின்போது நிபுணர்கள் அணிந்துகொள்ளும் பிரத்தியேக உடையை அணிந்து, அதில் சில ஆயுதங்களையும் பொருத்திக்கொண்டு தோன்றுவதால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நெஷனலுடன் தொடர்ந்து நான்காவது முறையாக கரம் கோர்த்திருக்கும் ஆர்.ஜே. பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்' படமும் வெற்றிபெறும் என திரையுலக வணிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM