இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடோவின் மனைவி, குஜராத் சட்டமன்றத்துக்கான தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவை தனது வேட்பாளர்களில் ஒருவராக களமிறக்குவதற்கு பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) தீர்மானித்துள்ளது.
பாஜகவில் ரிவாபா ஜடேஜா 2019 ஆம் ஆண்டு இணைந்தார்.
அவரை எதிர்வரும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில், ஜம்னாநகர் வடக்கு தொகுதியில் போட்டியிடச் செய்வதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது.
இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தர்மேந்திராசின் எம். ஜடேஜாவை நீக்கிவிட்டு ரிவாபா ஜடேஜாவுக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனது 182 வேட்பாளர்களில் முதல் கட்டமாக 160 பேரின் விபரங்களை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களில் தர்மேந்திராசின் எம். ஜடேஜா உட்பட 38 பேர் இப்பட்டியலில் இடம்பெறவில்லை.
குஜராத் சட்டசபைத் தேர்தல்கள் எதிர்வரும் டிசெம்பர் 1 முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. (S)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM