(எம்.மனோசித்ரா)
பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளைப் போன்றே இலங்கையின் நீதித்துறை கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் அமெரிக்காவின் ஒத்துழைப்பினை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ மற்றும் அமெரிக்க நீதிமன்ற திணைக்களத்தின் சட்ட ஆலோசகர் ஜோனஸ் எம்.வோகர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று புதன்கிழமை (9) நீதி அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பிற்குள் தற்போது நிலவும் வழக்கு விசாரணை தாமதமடைதல் , குறிப்பாக குற்றவியல் வழக்குகள் தாமதமடைதலை தவிர்ப்பதற்காக இதுவரையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் மற்றும் குற்றவியல் கட்டளை சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய திருத்தங்கள் தொடர்பிலும் , இது தொடர்பில் அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள நடைமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அமெரிக்காவில் வழக்கு காலம் தாழ்த்தப்படுவதை தவிர்ப்பதற்கான நடைமுறையாக குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக் கொள்வதன் மூலம் , நீண்ட விவாதங்கள் இன்றி வழக்கினை நிறைவு செய்யப்படுகின்றமை காணப்படுவதாக அமெரிக்க நீதிமன்ற திணைக்களத்தின் சட்ட ஆலோசகர் ஜோனஸ் எம்.வோகர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக பல்வேறு குற்றச் செயல்களில் பரஸ்பர ஒத்துழைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் நாடு கடத்தல் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் பயிற்சிகள் தேவைப்படுமெனில் அதனை வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் ஜோனஸ் எம்.வோகர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ , 'இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட கால நட்புறவு பேணப்பட்டு வருவதாகவும் , நாட்டின் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளுக்காகவும் , இலங்கையின் நீதித்துறை கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட வேண்டிய சாதகமான மாற்றங்கள் தொடர்பிலும் அமெரிக்காவின் ஒத்துழைப்பினை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM