(இராஜதுரை ஹஷான்,எம்,ஆர்.எம்.வசீம்)
சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை 2026ஆம் ஆண்டு வரை பிற்போடுமாறு சட்ட ஆய்வு கவுன்சிலிடம் வலியுறுத்தியுள்ளேன். இவ்விவகாரம் தொடர்பான உறுதி தீர்மானத்தை வெகுவிரைவில் சபைக்கு அறிவிப்பேன் என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் வியாழக்கிழமை (10 ) பாராளுமன்ற அமர்வு கூடிய போது சட்ட கல்லூரி பரீட்சைக்கு ஆங்கில மொழியில் மாத்திரம் தோற்ற வேண்டும் என எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு முன்வைத்த கோரிக்கை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நீதியமைச்சர் மேலும் கூறுகையில்.
சட்டக் கல்லூரி பரீட்சைக்கு ஆங்கில மொழியில் மாத்திரம் தோற்ற வேண்டும் என்று எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் பாராளுமன்றத்தில் எழுப்பபட்ட கேள்விகளுக்கு பலமுறை பதிலளித்துள்ளேன்.
மாணவர்கள் தமது தாய்மொழியில் பரீட்சைக்கு தோற்ற வாய்ப்பளிக்குமாறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளார்கள், இவ்விடயம் தொடர்பில் சட்ட ஆய்வு கவுன்சிலிடம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தேன்.
சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் இனி பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என 2020ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து சட்ட ஆய்வு கவுன்சிலிடம் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளேன்.
ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற முடியும் என 2020ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி இதுவரை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை,
ஆகவே வர்த்தமானிக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்ற காரணத்த்தினால் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை 2026ஆம் ஆண்ட ஜனவரி மாதம் 01ஆம் திகதி வரை பிற்போடுமாறு சட்ட ஆய்வு கவுன்சிலிடம் வலியுறுத்தியுள்ளேன்.
இடைப்பட்ட மூன்று ஆண்டு காலத்திற்கு மாணவர்களின் தாய் மொழி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளேன்.
சட்ட ஆய்வு கவுன்சிலிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் சாதகமான தீர்மானம் கிடைக்கப் பெற்றதும் அதனை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM