பஷில் ராஜபக்ஷ அமெரிக்கக் குடியுரிமையை நீக்கிவிட்டு மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிப்பார் - பொதுஜன பெரமுன

Published By: Digital Desk 2

10 Nov, 2022 | 10:46 AM
image

(எம்.மனோசித்ரா)

அவசியம் ஏற்பட்டால் முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமெரிக்கக் குடியுரிமையை நீக்கி, மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிப்பார்.

அவ்வாறில்லை எனில் இரட்டை குடியுரிமை விவகாரத்தில் மீண்டும் அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும்.

எதிர்காலத்தில் இவை இரண்டில் எதுவும் நடக்கலாம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் எவ்வித தடையும் ஏற்படவில்லை. கட்சி என்ற ரீதியில் ஏனைய கட்சிகளை விட பொதுஜன பெரமுனவே தேர்தலை எதிர்கொள்ள ஆர்வமாகவுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டே கடந்த வாரங்களில் கிராம மட்டங்களில் மக்கள் சந்திப்புக்களை நடத்தினோம்.

No change in decision to support RW, says Sagara

சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு முற்றிலும் மாறுபட்ட சூழலே வெளியில் காணப்படுகிறது.

அவற்றினடிப்படையில் அவதானிக்கும் போது, அடுத்த ஆண்டு மார்ச் மாதமல்ல, அடுத்த மாதம் தேர்தல் இடம்பெற்றால் கூட பொதுஜன பெரமுன மிக இலகுவாக வெற்றி பெறும்.

பொதுஜன பெரமுனவிற்கான புதிய தவிசாளர் வெகு விரைவில் நியமிக்கப்படுவார். கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் இது குறித்த தீர்மானம் எடுக்கப்படும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரது ஆலோசனைகளும் கட்சி செயற்பாடுகளின் போது பெற்றுக் கொள்ளப்படும்.

இரட்டை  குடியுரிமை விவகாரத்தைக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், அவர் அதனை நீக்கி தேர்தலில் போட்டியிட்டு பாரிய வெற்றியைப் பெற்றார்.

அதே போன்று அவசியம் ஏற்பட்டால் பஷில் ராஜபக்ஷவும் தனது இரட்டை குடியுரிமையை நீக்கி மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிப்பார். அவ்வாறில்லை எனில் இவ்விடயம் தொடர்பில் அரசியலமைப்பில் மீண்டும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். எவ்வாறிருப்பினும் இரட்டை குடியுரிமையுடையோரின் அரசியல் உரிமைகளை பறிப்பது சரியானதொரு விடயமல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். இம்முறை அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் தனிநபர் ஒருவரை இலக்காகக் கொண்டதாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17