யுக்ரைனின் கேர்சன் நகரிலிருந்து ரஷ்ய படைகள் வாபஸ்

Published By: Sethu

10 Nov, 2022 | 09:36 AM
image

யுக்ரைனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய கேர்சன் நகரிலிருந்து  வாபஸ் பெறுமாறு ரஷ்ய படைகளுக்கு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. யுக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட மற்றொரு பின்னடைவாக இது கருதப்படுகிறது.

கேர்சனிலிருந்து படைகளை வெளியேற்ற ஆரம்பியுங்கள் என யுக்ரைனிலுள்ள ரஷ்ய படைத் தளதபதி சேர்ஜி சுரோவிகினிடம் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி ஷோய்கு கூறினார்.

கேர்சன் நகரானது கேர்சன் பிராந்தியத்தின் தலைநகராகும்.  கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்யா கைப்பற்றிய முதலாவது  மாநகரம் இதுவாகும். பெப்ரவரி 24 ஆம் திகதி ரஷ்ய படையெடுப்பு ஆரம்பாகிய பின்னர் இதுவரை ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரேயொரு பிராந்திய தலைநகராவும் இது இருந்தது.

இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த யுக்ரைனிய அதிகாரிகள், முக்கியத்துவம் வாய்ந்த இந்த நகரிலிருந்து சண்டை எதுவுமின்றி ரஷ்ய படைகள் வெளியேற வாய்ப்பில்லை எனத் தெரிவித்தனர். 

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்துத் தெரிவிக்கையில் , போர்க்களத்தில் ரஷ்யா எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஓர் ஆதாரமாக இந்த வாபஸ் அறிவிப்பு உள்ளது எனக் கூறியுள்ளார். (S)

 POSTS

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47