இரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு

09 Nov, 2022 | 04:50 PM
image

கவிஞர் முறையூர் மங்கேஸ்வரன்  எழுதிய புதுக்கவிதை நூலான ‘மனதோடு பேசும் மௌனங்கள்’ மற்றும் ஹைக்கூ கவிதை நூலான ‘மகிழம் பூக்கள்’ ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா  மட்டக்களப்பு - செங்கலடி பிரதேசத்தில்  வெகுவிமரிசையாக நடைபெற்றது.

சந்திவெளி - தமிழ்ச்சங்கம் பாரம்பரிய கிராமிய கலை மன்றத்தின் ஏற்பாட்டில் முறக்கொட்டாஞ்சேனை ராமகிருஸ்ண மிஷன் வித்தியாலய அதிபர் எம். தவநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்  கல்குடா வலயக்கல்விப்பணிப்பாளர் தினகரன் ரவி,  கிரான் பிரதேச செயலாளர் ராஜ்பாபு ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டிருந்தனர். 

நிகழ்வில்முத்தமிழ் கலைஞன் பா. கதீஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தினார். மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா இசை நடனக்கல்லூரின் விரிவுரையாளர் மோகனதாசன்  கவிதை நூல்களுக்கான நயவுரையையும் ஆசிரிய வள நிலையத்தின் விரிவுரையாளர் திருமதி சுதாகினி டெஸ்மன் ராகல் ஆய்வுரையையும் நிகழ்த்தினர்.

இவ்விழாவில் பங்கேற்ற அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்கள் கையளிக்கப்பட்டன. கவிதை நூல்களுக்காக எவரிடமும் அன்பளிப்பு நிதி பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தகால அசாதாரண சூழ்நிலையின்போது புலம்பெயர்ந்து ஐக்கிய இராஜ்யத்தில் குடியுரிமை பெற்றுள்ள நூலாசிரியர் கவிஞர் முறையூர் மங்கேஸ்வரன்  பாடசாலை பருவத்திலிருந்தே கவிதை எழுதுவதில் நாட்டம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை...

2024-03-29 15:38:31
news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56