பாகிஸ்தானுக்கு நியூஸிலாந்தினால் 153 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

Published By: Digital Desk 5

09 Nov, 2022 | 03:38 PM
image

(நெவில் அன்தனி)

சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண 8ஆவது அத்தியாயத்தின் முதலாவது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு சுமாரான 153 ஓட்டங்களை வெற்றி இலக்காக நியூஸிலாந்து நிர்ணயித்துள்ளது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட இணங்கிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.

நியூஸிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

அதிரடிக்கு பெயர் பெற்ற பின் அலன் 3 ஓட்டங்களுடன் ஷஹீன் ஷா அப்றிடியின் 3ஆவது பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.

டெவன் கொன்வே, அணித் தலைவர் கேன் வில்லியம்சன் ஆகிய இருவரும் சற்று நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி பவர் ப்ளே நிறைவில் மொத்த எண்ணிக்கையை 36 ஓட்டங்களாக உயர்த்தினர்.

எனினும் பவர் ப்ளேயின் கடைசிப் பந்தில் டெவன் கொன்வே 21 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அவசரப்பட்டு ஓட்டம் பெற முயற்சித்தபோது ஷடாப் கான் எறிந்த பந்து நேரடியாக விக்கெட்டில் பட ரன் அவுட் ஆனார்.

இலங்கைக்கு எதிரான போட்டியில் அதிர்ஷ்டவசமாக சதம் குவித்த க்லென் பிலிப்ஸ் இன்றைய போட்டியில் 6 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மொஹமத் நவாஸின் பந்துவீச்சில் அவரிடமே இலகுவான பிடியைக் கொடுத்து நடையைக் கட்டினார். (49 - 3 விக்.)

10 ஓவர்கள் நிறைவில் நியூஸிலாந்து 3 விக்கெட்களை இழந்து 59 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

எவ்வாறாயினும் கேன் வில்லியம்சனும் டெரில் மிச்செலும் 4ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டனர்.

எனினும் ஷஹீன் ஷா அப்றிடி நேராக வீசிய பந்தை அப்பால் சென்று அடிக்க முயற்சித்த கென் வில்லியம்சன் 46 ஓட்டங்களுடன் போல்ட் ஆனார். (117 - 4 விக்.)

தொடர்ந்து டெரில் மிச்செலும் ஜேம்ஸ் நீஷாமும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் கடைசி 20 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 150 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.

டெரில் மிச்செல் 53 ஓட்டங்களுடனும் ஜேம்ஸ் நீஷாம் 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹமத் நவாஸ் 12 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரெட் ஸ்டார் - நியூ யங்ஸ்...

2026-08-08 13:18:49
news-image

வடக்கும் தெற்கும் நான்காவது தடவையாக மோதும்...

2026-08-08 13:11:34
news-image

சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் நான்கு அணிகளுக்கு...

2026-08-08 10:00:06
news-image

கலம்போ கெப்ஸ் அணியை 6 விக்கெட்களால்...

2026-08-08 05:40:25
news-image

கலம்போ எவ்.சி. - றினோன் போட்டி...

2026-08-07 19:27:38
news-image

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா...

2026-08-07 16:07:43
news-image

கண்டி றோயல்ஸை வெளியேற்றி இரண்டாவது தகுதிகாண்...

2026-08-06 02:19:43
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ்

2026-08-05 22:17:51
news-image

ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor...

2026-08-05 17:51:06
news-image

பொதுநலவாய போட்டிகளில் தங்கம் வென்ற ரொமேஷ்...

2026-08-05 12:32:55
news-image

கடைசி மகளிர் ரி20இல் பாகிஸ்தானின் சுழற்சியில்...

2026-08-04 23:54:46
news-image

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியினர் இலங்கை...

2026-08-04 23:18:26