மீட்கப்பட்ட இலங்கையர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் - வியட்நாம் ஊடகம் தகவல்

Published By: Rajeeban

09 Nov, 2022 | 03:25 PM
image

tuoitre.vn

மூழ்கிக்கொண்டிருந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களிற்கு உரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் என வியட்நாம் ஊடகம் தெரிவித்துள்ளது

வியட்நாம் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது

அவர்கள் பதற்றமற்றவர்களாக மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்,

அவர்களிற்கான தங்குமிடம் உணவு போன்றவற்றை அரசாங்கம் மிகவும் கௌரவமான விதத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

முன்னதாக நவம்பர் 8 ம் திகதி இரவும் 9 ம் திகதி அதிகாலையும் இலங்கையர்களை அதிகாரிகள் கரைக்கு கொண்டுவந்து மூன்று இடங்களில்Vung Tau city, district. Xuyen Moc and Dat Do அவர்களை தங்கவைத்துள்ளதுடன் உணவு அடிப்படை வசதிகளை வழங்கியுள்ளனர்.

அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர் பதற்றமின்றி காணப்படுகின்றனர் சிலர் சிகரெட் கூட வாங்கினார்கள் நூறிற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் உள்ளனர்.

இன்று அதிகாலை சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் இலங்கையர்களை சென்று பார்த்ததுடன் அவர்களிற்கு உதவுவதற்கு வியட்நாம் அரசாங்கமும் அதிகாரிகளும் அனைத்தையும் செய்வார்கள் என உறுதியளித்தார்.

தாங்கள் அங்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ள இலங்கையர்கள் அரிசி மற்றும் பாண் ஆகிய உணவுகளை குறிப்பிட்டு அவை மிகவும் ருசியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதிகளை சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

நவம்பர் ஆறாம் திகதி மதியம் ஹெலியோஸ் லீடர் கப்பல் 303 இலங்கையர்களை காப்பாற்றியவேளை அவர்களுடைய  கப்பல் ஏற்கனவே 40 மணித்தியாலங்கள் செயல் இழந்த நிலையி;ல் காணப்பட்டது.

அந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர் ஒருவர் தாங்கள் தங்கள் நாட்டிலிருந்து மியன்மார் சென்று அங்கிருந்து படகு மூலம் பயணித்ததாக  குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர்விற்கான சர்வதேச அமைப்பு imo வுங் டாவுவில் இலங்கையர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள  இடத்திற்கு சென்று நிலைமையை மதிப்பிட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58