எல்கடுவ தமிழ் மகா வித்தியாலய வாணி விழா 2022

09 Nov, 2022 | 02:17 PM
image

மாத்தளை ,  எல்கடுவ தமிழ் மகா வித்தியாலயத்தின் இந்து மன்றத்தினர் , பிரதி அதிபர் ஜீ.சரவணராஜ், ஆசிரியர்கள் , அபிவிருத்திக்குழு உத்தியோகத்தர்கள், ஆசிரிய பயிலுனர்கள் மற்றும் மாணவர்களினதும் முயற்சியில் கடந்த 6ஆம் திகதி ஞாயிறுக்கிழமை காலை வாணி விழா  பாடசாலையின் பிரதான  மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

அதிபர் மா.தியாகராஜன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக  கலைஞர், எழுத்தாளர் , கலைமாமணி லயன் பொன். பத்மநாதன் (ஜே.பீ),  கெளரவ அதிதிகளாக பொன். பிரகாஷ், உதவிக் கல்விப் பணிப்பாளர் (சைவநெறி) வலயக் கல்வி பணிமனை மாத்தளை,  திருமதி. எஸ். மகேஸ்வரி, இந்து சமய ஆசிரிய ஆலோசகர் , வலயக் கல்விப் பணிமனை, மாத்தளை மற்றும் சிறப்பு அதிதிகளாக எஸ். சந்திரசேகரம், கௌரவ தலைவர் மகாத்மா காந்தி சபா மாத்தளை, வே. பாலசுப்ரமணியம் அவர்கள், கௌரவ தலைவர் இந்து மகா சபை, ஸ்ரீ சிந்தாகட்டி குமர பெருமான் ஆலயம் மாத்தளை, எல்.  கவியரசன், கௌரவ தலைவர் சைவ மகா சபை மாத்தளை, எஸ். கேசவன் கௌரவ தலைவர், சுபீட்சம் - இந்து சமய சமூக நலன்புரி ஒன்றியம், எம். யோகராஜா செட்டியார், கௌரவ தலைவர் சுவாமி விபுலானந்த கலா மன்றம், கே. கிருஷ்ணகுமார்,  மலையக கல்வி அபிவிருத்தி மன்ற பரீட்சைகள்  பொறுப்பாளர், எம்.ராம்திலகர், ரோட்டரி கழகம் மாத்தளை, ஆர். ஸ்ரீதரன் இலங்கை மாலைத்தீவுக்கான உதவி ஆளுநர் ஆகியோர் கலந்துகொண்டதோடு, மாத்தளை வலய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

விழாவில் மாணவ,  மாணவிகளின் வரவேற்பு, பரதநாட்டியம், நாடகம், கவியரங்கம், பண்ணிசை, வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், கதம்ப நடனம் என முத்தமிழ் விழாவாக வாணி விழா நடைபெற்றது.

வாணி விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, பண்ணிசை, கோலப் போட்டி, பூமாலை கட்டுதல், பூச்சரம் தொடுத்தல் போட்டியிலும் ஆசிரியர்களுக்கான கோலப் போட்டியிலும் வெற்றியீட்டியவர்களுக்கும், புலமைப் பரிசு பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த கலைஞர், எழுத்தாளர் லயன். பொன். பத்மநாதன் (ஜே.பீ.) அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.  இறுதியாக பிரதி அதிபர், இந்து மன்ற பொறுப்பாளர் ஜீ.சரவணராஜ் அவர்களது நன்றியுரையுடனும், வாணி விழா 2022 இனிதே  நிறைவு பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும்...

2025-02-18 17:31:20
news-image

சுழிபுரம் மேற்கு கலைமகள் அறநெறி பாடசாலை...

2025-02-18 13:02:36
news-image

அவிசாவளை சாயி பாபா ஆலய நூதன...

2025-02-18 12:53:21
news-image

யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி மெய்வல்லுநர் போட்டி...

2025-02-17 17:21:25
news-image

கரிஷ்மா கந்தகுமாரின் கர்நாடக இசை அரங்கேற்றம்

2025-02-17 16:52:16
news-image

திருகோணமலையில் "பெண்கள் அரசியலில்" எனும் தலைப்பில்...

2025-02-17 17:34:07
news-image

மாற்றுத்திறனாளிகளுடன் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சி

2025-02-17 17:33:29
news-image

புகழ் பூத்த எழுத்தாளரான பாலமனோகரனின் "மிஸ்டர்...

2025-02-16 17:06:44
news-image

இயக்கச்சி பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் யாழ்....

2025-02-16 16:53:04
news-image

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175...

2025-02-15 13:58:01
news-image

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்...

2025-02-15 13:49:53
news-image

யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள...

2025-02-15 13:29:22