“காலி உரையாடல்” ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

28 Nov, 2016 | 03:06 PM
image

இலங்கை கடற்படையினரால் 7ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்; சர்வதேச கடல் சம்பந்தமான “காலி உரையாடல்” மாநாடு 2016 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (28) முற்பகல் கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் ஆரம்பமானது.

40 நாடுகள், 12 சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமுத்திரப் பாதுகாப்பு தொடர்பான நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் இக்கலந்துரையாடலின் கருப்பொருள் “மூலோபாய சமுத்திர தொடர்பை மேம்படுத்தல்” என்பதாகும்.

இக்கலந்துரையாடல் இன்றும் நாளையும் காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெறுகின்றது.

சமுத்திர வலய நாடுகளுக்கு பொதுவான அச்சுறுத்தலாக உள்ள அம்சங்கள் தொடர்பாகவும் அவற்றுக்கு ஒன்றிணைந்து முகம் கொடுப்பது தொடர்பாகவும் நடைபெறும் இக்கலந்துரையாடலின் மூலம் தற்போதைய சமுத்திர ரீதியான சவால்களை வெற்றி கொள்வதற்கான பயனுறுதி வாய்ந்த பொறிமுறை ஒன்றை அமைக்கவும், வலய நிபுணர்களின் மூலம் சமுத்திர ரீதியான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கண்டறியவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடல் சமுத்திரத்துடன் தொடர்புடைய விடயங்களை கலந்துரையாடுவதற்கும் இதுதொடர்பான அறிவு மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கும் சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர்களான மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க, அர்ஜுன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு பணிக்குழாம் தலைவர் எயார் சீப் மார்சல் கோலித குணதிலக்க, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13