ஆசிரியர் தகுதிகாண் பரீட்சை அனுமதி அட்டையில் சன்னி லியோனின் கவர்ச்சிப் படம்: விசாரணைக்கு உத்தரவு

Published By: Sethu

09 Nov, 2022 | 12:50 PM
image

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஆசிரியர்களுக்கான தகுதிகாண் பரீட்சையொன்றில் பங்குபற்றச் சென்ற பெண்ணொருவரின் அனுமதி அட்டையில் அவரின் புகைப்படத்துக்குப் பதிலாக நடிகை சன்னி லியோனின் கவர்ச்சி புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு கர்நாடக மாநில கல்வித்திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 6 ஆம் திகதி மேற்படி பரீட்சை நடைபெற்றது. 

இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்குச் சென்ற பெண்ணொருவர், தனது அனுமதி அட்டையை சமர்ப்பித்தபோது அதில் சன்னி லியோனின் கவர்ச்சிப் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தமை தெரியவந்தது. அதையடு;தது, இதுதொட்ரபாக பொலிஸாருக்கு பரீட்சை நடைபெற்ற கல்லூரியின் அதிபரினால் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

இப்பரீட்சைக்காக இணையத்தில் விண்ணபிக்கும்போது, சன்னி லியோனின் புகைப்படம் தரவேற்றப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இப்பரீட்சைக்கு தான் நேரடியாக இணையத்தில் விண்ணப்பிக்கவில்லை எனவும், தனக்காக இணையத்தில் விண்ணப்பம் செய்யுமாறு பிறரிடம் தான் கோரியதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். 

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸாரிடம் தாம் கோரியுள்ளதாக மாநில கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்