இடைக்காலத் தேர்தல்கள் தொடர்பிலும் ட்ரம்ப் மோசடி குற்றச்சாட்டு

Published By: Sethu

09 Nov, 2022 | 10:29 AM
image

அமெரிக்காவில் நேற்று வாக்களிப்பு நடைபெற்ற தேர்தல்களில் மோசடி இடம்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

இத்தேர்தல்களின் வெற்றி தனது குடியரசுக் கட்சியினரிடமிருந்து திருடப்படுவதாக 'ட்ருத் சோஷல்' எனும் தனது  சமூக வலைதளத்தில் டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.

2020 ஜனாதிபதித் தேர்தலில் தான் தோல்வியடைந்ததை டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறார். அத்தேர்தலில் மோசடிகள் நடந்ததாக அவர் கூறிவருகிறார். 

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர்கள் முதலானோரை தெரிவு செய்வதற்கான இடைக்கால தேர்தல்களின் பிரதான வாக்களிப்பு நேற்று நடைபெற்றது. இவ்வாக்களிப்பு தொடர்பிலும் டொனால்ட் ட்ரம்ப் மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இத்தேர்தல்களில் டொனால்ட் ட்ரம்ப் ஒரு வேட்பாளர் அல்லர். ஆனால், இத்தேர்தல்களில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கான அறிவிப்பை அவர் வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்பின் குற்றச்சாட்டுகள் பொதுவாக, கடும் போட்டி நிலவும் அரிஸோனா மாநிலத்தின் மேரிகோபா கவுன்ரி பிராந்தியத்தின் வாக்களிப்பு தொடர்பானாதாகும்.  

அரிஸோனா மக்களே, நீங்கள் வாக்களித்து முடியும்வரை வரிசையிலிருந்து அகல வேண்டாம். கோளாறான இயந்திரங்கள், தாமதங்கள் மூலம்  தேர்தலை திருடுவதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள். அதற்கு இடமளிக்க வேண்டாம் என டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதேவேளை, மேரிகோபா பிராந்திய  அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளனர் இது தொடர்பாக கூறுகையில், 223 வாக்களிப்பு நிலையங்களில் சுமார் 20 சதவீதமான நிலையங்கள் சிரமங்களை எதிர்கொண்டதாகவும், ஆனால் அவை வாக்களிப்பை பாதிக்கக்கூடிய அளவுக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேரிகோபா கவுன்ரியில் சில வாக்களிப்பு இயந்திரங்கள் சரியாக இயங்கவில்லை எனக் கூறி, வாக்களிப்பு நேரத்தை அதிகரிக்க உத்தரவிமாறு கோரி குடியரசுக் கட்சியினர் நிதிமன்றத்தல் மனுவொன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

அரிஸோனா மாநிலத்தில் 2020 ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 10,000 வாக்குகளாலேயே ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அதனால் அம்மாநிலத்தின் 11 தேர்தல் கல்லூரி வாக்குகள் ஜோ பைடனுக்கு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய தேர்தல்களில் இதுவரை ஊடகங்களின் கணிப்புகளின் அடிப்படையிலனா பெறுபேறுகளின்படி, இரு கட்சிகளும் மாறிமாறி வெற்றிகளை ஈட்டி வருகின்றன. குடியரசு கட்சி சொற்ப அளவில் முன்னிலையில் உள்ளனது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52