இன்றைய இணைய தலைமுறையினரிடத்தில் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களைப் பெற்றிருக்கும் முன்னணி யூட்யூப் நட்சத்திரம் மைக் செட் ஸ்ரீராம், பெயரிடப்படாத படத்தின் மூலம் கதையின் நாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். இதற்கான தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் விவேக் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத காதலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும் படத்தில் நாயகனாக 'மைக் செட்' ஸ்ரீராம் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகைகள் மானசா மற்றும் ரிமி ஆகியோர் நடிக்கிறார்கள்.
முத்து மூவேந்தர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அருள்ராஜ் கென்னடி இசையமைக்கிறார். காதலை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை என். என். பிக்சர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தங்கராஜ் மற்றும் வினோத் துரைசாமி ஆகியோர் தயாரிக்கிறார்கள். இதில் வினோத் துரைசாமி நடிகர் சந்தானத்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' தமிழ் சினிமாவின் காதலை மையப்படுத்தி திரைப்படங்கள் வருவது அரிதாகி விட்டது. இந்த குறையை பூர்த்தி செய்யும் வகையில், காதலும், நகைச்சுவையும் நிரம்பி இருக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை இப்படத்திற்காக திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறோம்.
இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கவிருக்கிறார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்'' என்றார்.
இணையத்தை கலக்கி வரும் மைக் செட் ஸ்ரீராம், சுயாதீன பாடல்களின் வீடியோவில் நடித்திருந்தாலும், சில படங்களில் சின்ன வேடத்தில் நடித்திருந்தாலும், கதையின் நாயகனாக இந்த படத்தில் அறிமுகமாவதால்.., அவருடைய ரசிகர்கள் இப்படத்தை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM