கடந்த 2011ஆம் ஆண்டில் இலங்கையின் 2ஆவது விசேட புற்றுநோய் வைத்தியசாலையை யாழ் நகரில் நிர்மாணிப்பதற்காக 2.2மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை சேகரித்த இலங்கையின் மிகபபெரிய நிதி அறக்கட்டளை செயற்திட்டமான TRAIL ஆனது மீண்டும் ஒருமுறை ‘Walk. Unite.Heal’நடைபவனி குறித்து அறிவித்துள்ளது.
இதற்கமைய, 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நாட்டின் தென் பகுதியில் 5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வைத்தியசாலையை நிர்மாணித்தல் எனும் புதிய குறிக்கோளுடன் நடைபவனி முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த அறிவிப்பானது அண்மையில் பார்க் ஸ்ட்ரீட் மியுஸ் இல் The Colours of Courage Trust மூலம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வெளியீட்டு நிகழ்வில் TRAIL அமைப்பின் ஸ்தாபகர்களான நாதன் சிவகணநாதன் மற்றும் சரிந்த உனம்புவே ஆகியோரினால் அறிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னைய TRAIL தூதர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் 2016 ஆண்டிற்கான முழுமையான பயணத்துடன் தம்
மை மீண்டும் ஒருதடவை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்.
2016 ஆம் ஆண்டுக்கான TRAIL நடைபவனியில் பங்கேற்பவர்கள் தமது பயணத்தை பருத்தித்துறையில் ஆரம்பித்து 28 நாட்களுக்குள் நாளொன்றுக்கு சுமார் 23 கிலோ மீற்றர் வீதம் தெய்வேந்திரமுனை நோக்கி பயணிக்கவுள்ளனர். இதில் பங்கேற்பவர்கள் தத்தமது திறனுக்கேற்ப ஒருநாள், 3 நாட்கள், முழுமையாகவோ அல்லது மெய்நிகர் பயணிகளாகவோ பங்கேற்க முடியும். 2016 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள TRAIL தொடர்பான பதிவு விவரங்கள் மற்றும் நிதி அல்லது நன்கொடைகள் குறித்து இந் நிறுவனத்தின் புதிதாக புதுப்பிக்கப்பட்ட www.trailsl.com எனும் இணையத்தளம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த நிகழ்வில் கடந்த 2011 நடைபவனியை முழுமையாக பூர்த்தி செய்த ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய 12 Trail Blazers ஆகியோரின் பங்கேற்பு மற்றும் அங்கீகாரம் கிடைத்திருந்தது.
TRAIL இன் உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரபல தூதர்களான குமார் மற்றும் மஹேல ஆகியோருக்கு மேலதிகமாக ஜக்குலின் பெர்னாண்டஸ், ஒடாரா குணவர்தன, யுரேனி நொஷிகா மற்றும் நட்டாலி மற்றும் நதியா அன்டர்சன்ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM