அவுஸ்திரேலிய பகிரங்க கனிஷ்ட டென்னிஸ் தகுதிகாண் சுற்றில் இலங்கையின் கீரன் வைரவநாதன்

08 Nov, 2022 | 09:35 PM
image

(நெவில் அன்தனி)

மெல்பர்னில் அடுத்த வருடம் (2023) நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிக்கு முன்னோடியாக ஜப்பானில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க கனிஷ்ட தகுதிகாண் சுற்றில் பங்குபற்றுவதற்கு இலங்கையின் கனிஷ்ட முதல் நிலை வீரர் கீரன் வைரவநாதன் தகுதிபெற்றுள்ளார்.

இந்த தகுதிகாண் சுற்று ஜப்பானின் யோக்காய்ச்சி டென்னிஸ் அரங்கில் நவம்பர் 13ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதிவரை நடைபெறும்.

இந்தத் தகுதிகாண் சுற்றில் பங்குபற்ற ஆசிய கடல்சூழ் (Asia/Oceania)  பிராந்தியத்திலிருந்து 16 வீரர்களும் 16 வீராங்கனைகளும் அழைக்கப்படுவர்.

ஒவ்வொரு போட்டி நிகழ்ச்சியிலும் ஒற்றையர் பிரிவில் வெற்றிபெறுவர் அவுஸ்திரேலிய பகிரங்க கனிஷ்ட சம்பியன்ஷிப் 2023இல் wildcard முறைமையில் பிரதான சுற்றில் இணைக்கப்படுவர்.

போட்டி விதிகளுக்கு அமைய இலங்கையிலிருந்து 4 வீரர்கள் இப் போட்டிக்கு பிரேரிக்கப்பட்டனர்.

ஆண்களுக்கான போட்டிக்கு கீரன் வைரவநாதன், செய்யத் ஸிஹார் ஆகிய இருவரையும் பெண்களுக்கான போட்டிக்கு சாஜிதா ராஸிக், விஷ்மி சேரசிங்க ஆகிய இருவரையும் இலங்கை டென்னிஸ் சங்கம் பிரேரித்திருந்தது.

அவர்களில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் தரவரிசைப்படி இலங்கையில் முதல்நிலை வகிக்கும் கீரன் வைரவநாதனுக்கு  ஜப்பானில்  அவுஸ்திரேலிய பகிரங்க ஆகிய தகுதிச் சுற்றுக்கான பாதை ( Road to Australian Open Asian Qualifiers in Japan)  தகுதிகாண் சுற்றில் பங்குபற்ற வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை டென்னிஸ் சங்க அரங்கில் இந்த மாத முற்பகுதியில் நடத்தப்பட்ட சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் (ITF) 18 வயதுக்குட்பட்ட தர வரிசைப்படுத்தல் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவிலும் இரட்டையர் பிரிவிலும் கீரன் வைரவநாதன் இறதிப் போட்டிகளில் விளையாடி இருந்தார்.

அவுஸ்திரேலிய பகிரங்க கனிஷ்ட டென்னிஸ் போட்டியில் பங்கபற்ற முதலாவது இலங்கையராக தகுதிபெறும் நம்பிக்கையுடன் கீரன் வைரவநாதன் தனது பயிற்றுநர் குயங்கா வீரசேகரவுடன் ஜப்பானில் உள்ள நாகோயாவுக்கு எதிர்வரும் 12ஆம் திகதி பயணிக்கவுள்ளார்.

தி 2023 டன்லொப் ரோட் டூ தி ஒஸ்ட்ரேலியா ஒப்பன் ஜுனியர்ஸ் ((The 2023 Dunlop Road to the Australian Open Juniors)  என்ற பெயரிலான இப் போட்டியை அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிக்கான பந்து பங்களாரான டன்லொப், ஜப்பான் டென்னிஸ் சங்கம், டென்னிஸ் ஒஸ்ட்ரேலியா ஆகியன இணைந்து நடத்தகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறுதிக் கட்டத்தில் இலங்கை ஏ ஆதிக்கம்...

2023-02-03 19:50:53
news-image

சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்டத்திற்கு டயலொக் உந்துசக்தி

2023-02-03 16:47:50
news-image

ஐ.சி.சி. சுப்பர் ஸ்டார்கள் குழுவில் இலங்கையின்...

2023-02-03 14:45:06
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் ரஷ்யர்கள் பங்குபற்றுவதை...

2023-02-03 13:32:56
news-image

மதுஷான் ஆட்டமிழக்காமல் அபார இரட்டைச் சதம்...

2023-02-03 10:41:11
news-image

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சுசந்திகா மகளிர்...

2023-02-03 09:44:25
news-image

ஆர்ச்சர் அபார பந்துவீச்சு, இங்கிலாந்துக்கு ஆறுதல்...

2023-02-02 10:31:01
news-image

55 வயதில் போர்த்துகல் கழகத்தில் விளையாட...

2023-02-02 10:04:53
news-image

துடுப்பாட்டத்தில் ஷுப்மான், பந்துவீச்சில் பாண்டியா அசத்தல்...

2023-02-02 09:44:41
news-image

மகளிர் உலகக் கிண்ண இலங்கை குழாத்தில்...

2023-02-01 18:31:57
news-image

வார இறுதியில் இலங்கை மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்டம்

2023-02-01 18:36:17
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக், பராலிம்பிக் அதிகாரி...

2023-02-01 14:38:17